
ரமழானே நீ வருவாயே
வசந்தமும் தருவாயே
அமல்கள் நிரைய
குணங்கள் மாற
பிரியத்தனமாகுமே
பிரார்த்தனைகள்...
ஸஹரும் வரும்
அருளள்ளி தந்திடத்தானே
ஓய்வாய் வரும் ரமழானிலே
வேலைகளை நிரைத்து
நோன்பினை நோகடிக்காதீரே ....
புழுதிகள் படிந்த
சட்டை பையாய்
நெஞ்சறை கறை போக்க
வழி வகுப்பாயே ...
ஷைத்தான் முடக்கப்பட்டாலுமே
மனித கசடுகள் நீங்கிட
பொழுதுகள் நீள்ந்திடு
அருமறையோடு கலந்திடு
காரண காரியங்களுக்கு
விடுப்பைக் கொடுத்திடு ...
நேரமொன்றிலும் நேர்த்தியாய்
திக்ருகளை மொழிந்திடு
வல்லோன் வகுத்த
நலவுகளோடு உன்னை
பொருத்திடு...
பாவக்காரியங்களை விட்டிடு
விரைவாய் தோன்றும்
என்னங்களை ஒதிக்கிடு
நல்லொரு பொழுதாகும்
ரமழானே ...
இனி எப்போது என்று
நாமறியேழாதே
இன்றே கையிருப்பில்
இருக்கும் பொக்கிஷமே
பாக்கியம் உணர்ந்திடு...
பிரார்த்தனைகளால்
பாவமன்னிப்பை கேட்டிடு
கண்ணீர் மல்க செய்தவை
செய்ய நினைத்தவைகளை
மனமுவந்தே முறையிட்டு
இறையோனிடமே
ஒப்படைத்திடு
மனிதா
கண்ணாடி உலகிது
சிதறிடும் என அறியாமலே
பதறாது பாவங்களென்றறியாமலே
நீ நானே போட்டியிட்டு
செய்திருப்பவை அகலட்டும்
நேரத்தை நேர்த்தியாய் கடந்திடு
ரமழானே
உன்னோடு உன்னதமாய்
நானும் நடந்திடத்தான்
பிரார்த்திக்கிறேனே...
சஹ்னாஸ் பேகம்
முதலைப்பாளி, புத்தளம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments