Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-82


415. வினா நண்பர் தரும் துன்பத்தின் காரணம் யாது?
விடை: அறியாமை அல்லது மிகுதியான உரிமை 
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.(805)

416.வினா; வளர்வதை விட குறைவதே நல்லது எது?
விடை:பண்பில்லாதவர் நட்பு 
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.
(811)

417. வினா : அறிவுடையோரின் பகையே நல்லது எப்போது?
விடை: அறிவற்றவரின் நட்பை விட 
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.(818)

418. வினா: கனவிலும் துன்பம் தருவது எது?
விடை: சொல் வேறு - செயல் வேறு கொண்டவர் நட்பு
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.(819)

419. வினா : யாருடைய ஈகை பெறுபவனுக்குத் தவமாகும்?
விடை: அறிவில்லாதவன் செய்யும் ஈகை 
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம்.
(842)

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments