Ticker

6/recent/ticker-posts

Ad Code



காவல்துறை அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்களிடம் பெண் ஒருவர் 1.2 மில்லியன் வெள்ளி இழந்துள்ளார்.


சிங்கப்பூரில் வசிக்கும் ஜேன் CNA நிருபர்களிடம் அண்மையில் பகிர்ந்த கதை இது.

50 வயதுடைய ஜேனுக்கு ஒரு நாள் 'காவல்துறையிடமிருந்து' தொலைபேசி அழைப்பு வந்தது.

அவர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சந்தேகம் வந்துள்ளதாக 'அதிகாரிகள்' கூறினார்.

எங்குச் செல்கிறார், என்ன செய்கிறார் என்று ஜேன் நாளுக்கு 4 முறை சொல்லவேண்டும் என்றும் வங்கிப் பரிவர்த்தனைகளின் விவரத்தை அனுப்பவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிப்பதற்கு அவர்கள் ஜேனிடம் 'காவல்துறை அட்டை' ஒன்றையும் காட்டினர்.

ஜேன் புதிய வங்கி கணக்கு உருவாக்கவேண்டும் என்றும் அதில் பணம் மாற்றவேண்டும் என்றும் 'அதிகாரிகள்' கூறினர்.

உண்மையில் மோசடியில் ஈடுபடுவோரைப் பிடிக்க ஜேன் போன்றவர்கள் முக்கியம் என்றும் அவர்கள் கூறினர்.

'நான் காவல்துறைக்கு உதவுவதைப் போல் என்னை நினைக்க வைத்தனர்,' என்று ஜேன் சொன்னார்.

அடுத்த ஒரு மாதக்காலத்தில் ஜேன் பல முறை கணக்கிற்குப் பணம் அனுப்பினார்.

ஜேன் சில முறை நேரில் சென்றும் பணம் கொடுத்ததாக சொன்னார்.

ஒவ்வொரு முறையும் வேறு ஒருவர் பணத்தை வாங்கியதாக அவர் கூறினார்.

மொத்தம் 1.2 மில்லியன் வெள்ளி ஒப்படைத்த பிறகு...'அதிகாரிகள்' ஒரு நாள் ஜேனைத் தொடர்புக்கொள்ளவில்லை.

ஒரு நாள்...10 நாளானது.

ஜேன் தாம் மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என்பதை சந்தேகித்தார்.

அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

"தயவுசெய்து என்னைப் போல் மோசடிக்கு ஆளாகவேண்டாம்...மோசடிக்காரர்கள் வேட்டைக்காரர்கள் போல் செயல்படுவதுண்டு," என்று ஜேன்  அறிவுறுத்தினார்.

seithi

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments