Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-182


குறள் 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

ஒரு வேலையை சிறப்பாச் செய்கிற திறமை உள்ளவரோட செயல் உறுதி அரசாங்கத்தையும் கவர்ந்து மத்தவங்களாலயும் புகழ்ந்து பேசப்படும். 

குறள் 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

நமக்கு ஒரு இக்கட்டு வந்த காலத்துல நம்மளை அந்தரத்துல விட்டுட்டு போற கூட உள்ள ஆளுங்களைப் பத்தி சாகும் போது  நெனச்சாக் கூட நம்ம மனசு ஆறாது. 

குறள் 800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

தப்பு தண்டா செய்யாதவங்களோட நட்பா இருக்கணும். அப்பிடி இப்பிடி இருக்கக் கூடிய ஆளுங்களை எப்பாடு பட்டாவது கழற்றி விட்டுறணும். 

குறள் 802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

நட்புன்னா உரிமையோட பழகணும். எதையும் உரிமையோட செய்யணும். இந்த உரிமையை மதிச்சு மகிழ்ச்சியா இருக்கது தான் பெரிவங்களோட கடமை. 

குறள் 806
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

ரொம்ப நாளா நண்பர்களாக இருக்கவங்கள்ல  யாராவது கெடுதல் செஞ்சாக்கூட, பெரியவங்க  நட்புக்கு மரியாதை கொடுத்து அவங்களோட நட்பை முறிச்சிக்க மாட்டாங்க. 

(தொடரும்)

Email;vettai007@yahoo.com



Post a Comment

0 Comments