Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-20


பித்தளை!
"நேராய்த் தடுக்குமே"

கலிவிருத்தம்

வாய்பாடு:

விளம்..விளம்..தேமா..விளம்:

ஈயமே தடவிட ஏற்கும் பித்தளை
மாயமே செய்திடும் மாண்பு சமையலே
தூயதாய் ஆக்கியே தேர்வைச் சேர்த்திடும்
நோயதை வரவிடா நேராய்த் தடுக்குமே!

ஆவாரம்பூ
கலிவிருத்தம்:

வாய்பாடு:

விளம்..விளம்..மா..விளம்:

"தடவிட ஆறும்  புண்களே"

எண்ணிலா பூக்களில் ஏற்கும் மருந்தென
விண்ணவர் விருந்தென தந்த வரமென
மண்நிலம் யாவிலும் மாண்பாய் மலர்வது
புண்ணிடைத் தடவிட ஆறும் புண்களே!

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments