Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-28


ஆதியும் பகவனும், திருமயிலாப்பூரிலே சிறிது காலம்
வாழ்ந்து, பின்னர் மேலும் வேறு ஊருக்குப் பயணம் ஆயினர். அப்படிப் பயணம் ஆன வழி வஞ்சிமா நகரைச் சென்றடைந்தனர். 

அங்கு அவர்கள் வாழ்க்கை நடத்திய நேரத்தில், அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அவ்வூரை ஆண்டு கொண்டிருந்த அரசன் அதியமான், தனக்குக் குழந்தைப் பேறு இல்லையே என, அப்பேறு வேண்டி, தான தர்மங்களையும், வேள்விகளையும் நடத்தி கடவுளை வணங்கி வேதளைப் பட்டுக் கொண்டிருந்தான். 

இதை அறிந்த ஆதியும் பகவனும், அதியமானை அணுகி தங்களது ஆண் குழந்தையை அவ்வரசனுக்கு தர விருப்பம் தெரிவித்தனர். 

இதைக் கேட்ட மன்னனும், தாங்க முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். குழந்தையைத் தாரை வார்த்தாகப் பெற்றுக் கொண்ட அதியமான், ஆதியையும் பகவனையும் வெகுவாகப் பாராட்டி. தன்னுடனேயே தங்குமாறு கேட்டுக் கொண்டான். 

அதற்கு ஆதியும் பகவனும், அரசனது விருப்பத்திற்கு தலை சாய்த்து, சிறிது காலம் மட்டும் அங்கிருந்து விட்டு, வேற்றூருக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தனர். 

அதியமானால் வளர்க்கப் பெற்ற அக்குழந்தை 'அதியமான் அஞ்சி' என்று பிற்காலத்தில் அழைக்கப் பெற்ற அரசனாவான்.

காஞ்சி மாநகர் விட்டுப் பிரிந்து வேறு ஊருக்குப் பயணமான ஆதியும் பகவனும், திருவாரூர் எனும் நல்லூரைச் சென்றடைந்தனர். அங்கும் பல காலம் வாழ்ந்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்து வந்த வேளையில் மேலும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த அழகான ஆண் குழந்தைக்குக் 'கபிலன்' எனப் பெயர் சூட்டி அழைத்தனர். இக் கபிலனையும், அன்றாடம் வேதம் ஓதி, மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த ஓர் அந்தணருக்குத் தாரை வார்த்துக் கொடுத்து, அவ்வூரையும் விட்டுப் பிரிந்து வேற்றூருக்குப் பயணம் ஆயினர்.

ஆக, இந்த ஆதிபகவனுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளைப் பற்றியும் அக்குழந்தைகள் சென்றடைந்த இடங்களைப் பற்றியும். ஏழாவது குழந்தையான கபிலரால் எழுதப்பட்டிருக்கின்ற கபிலரகவலில் இருந்து நாம் காண்கின்ற ஒரு செய்தியாகும். அந்தக் கபிலரகவல் இது தான்.

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments