
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகும் வாகனங்களுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
கார்களுக்கும் சிறிய லாரிகளுக்கும் அது பொருந்தும்.
புதிய வரி அடுத்த மாதம் இரண்டாம் தேதி நடப்புக்கு வரும்.
ஏற்கனவே நடப்பில் உள்ள வரிகளுடன் இது சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வரி நிரந்தரமானது என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.
அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து திரு டிரம்ப் கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது பெரிய அளவிலான வரிகளை விதித்துள்ளார்.
முன்னதாக எஃகு, அலுமியனியம் இறக்குமதிகள் மீதும் 25 விழுக்காட்டு வரி அறிவிக்கப்பட்டது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments