Ticker

6/recent/ticker-posts

நிதியை நிறுத்திய அமெரிக்கா.. அதிகரிக்கும் எச்ஐவி தொற்று உயிரிழப்புகள்.. வேதனை தெரிவிக்கும் ஐ.நா!


ஐ.நா. எச்ஐவி தொற்று உயிரிழப்புகள் அதிகரிக்கும் என வேதனை தெரிவித்துள்ளது. அமெரிக்கா நிதியை நிறுத்தியதால், பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்கா நிதியை நிறுத்தியதால், உலகம் முழுவதும் எச்ஐவி தொற்று உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது.

ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்தி உத்தரவிட்டார். இந்நிலையில், ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. எய்ட்ஸ் தடுப்பு நிர்வாக இயக்குநர் வின்னி பியானிமா, அமெரிக்க நிதி நிறுத்தப்பட்டதால் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன் காரணமாக எய்ட்ஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், நாளொன்றுக்கு 2 ஆயிரம் புதிய பாதிப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க உதவி அமைப்பு மீண்டும் நிதியை விடுவிக்காவிட்டால், 4 ஆண்டுகளில் 63 லட்சம் பேர் எச்ஐவி தொற்றால் உயிரிழக்கக் கூடும் என அச்சம் தெரிவித்த அவர், 90களிலும், 2000 கால கட்டத்திலும் இருந்ததை போல எச்ஐவி காரணமான உயிரிழப்பு கணிசமாக அதிகரிக்கும் என்றும் வேதனை தெரிவித்தார்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments