
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணிக்கு இது முதல் வெற்றியாகும். இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
அபிஷேக் சர்மாவை 6 ரன்னிலும், இஷான் கிஷனை முதல் பந்திலும் ஆட்டமிழக்க செய்து ஷர்துல் தாகூர் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார். அடுத்து இணைந்த நிதிஷ் ரெட்டி – டிராவிஸ் ஹெட் இணை சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டது.
ஹெட் 47 ரன்னில் ஆட்டமிழக்க நிதிஷ் ரெட்டி 32 ரன்னிலும், ஹெய்ன்ரிக் கிளாசன் 26 ரன்னிலும் வெளியேறினர். 13 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி அன்கிட் வர்மா அதிரடியாக 36 ரன்கள் சேர்த்து ஆட்டடமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
தொடக்க வீரர் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக ரன்கள் குவித்தது. 8.2 ஓவர்களில் அணி 120 ரன்கள் எடுத்திருந்தபோது பூரன் 70 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பந்த் 15 ரன்களும், டேவிட் மில்லர் 13 ரன்களும், அப்துல் சமத் 22 ரன்களும் எடுத்தனர்.
16.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 1 போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் +0.963 நெட் ரன் ரேட்டுடன் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments