Ticker

6/recent/ticker-posts

பிறை காண்பதில் சர்ச்சை! 30ம் திகதி ஸவூதியைப பின்பற்றும் நாடுகளில் ஈதுப் பெருநாள்!


ரமழானின் முடிவு நெருங்கி வரும் நிலையில்  இவ்வருடமும் பிறை பார்ப்பது தொடர்பான சர்ச்சைகள் முஸ்லீம் சமூகத்திற்குள் எழுகின்றன.

இஸ்லாமியப் பண்டிகையான ஈத் அல்-பித்ரைக் குறிக்கும் பிறையை மார்ச் 29 சனிக்கிழமையன்று, மத்திய கிழக்கு உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து பார்க்க முடியாது என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதனைப் பொருட்படுத்தாமல், ஸவூதி அரேபியா எப்படியும் ஞாயிற்றுக்கிழமை ஈத் தினத்தை அறிவிக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

பல ஆண்டுகளாக,  இஸ்லாத்தின் புனித தளங்களின் தாயகம் - விஞ்ஞானிகள் மற்றும் வானியலாளர்கள் அதைக் காண முடியாத நிலையிலும் கூட ஈத் தினம்  "போலி"யாக அறிவிப்பு செய்து வருதாக விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டி வந்துள்ளனர்.  இந்த விமர்சனங்களுக்கு ஸவூதி அதிகாரிகள் ஒருபோதும் பதிலளிப்பதுமில்லை!

சில நாடுகள் புதிய பிறையைக் கண்டறிய உள்ளூரில் பிறை பார்ப்பவர்களை நம்பியிருக்கின்றன.

உத்தியோகபூர்வ சந்திரனைப் பார்க்கும் அமைப்புகள் இல்லாத இங்கிலாந்து போன்ற நாட்டு முஸ்லிம்கள் ஸவூதி அரேபியாவின் வழியைப் பின்பற்றுகிறார்கள்; இருப்பினும் ஸவூதி இராச்சியத்திலுள்ள சில மத அறிஞர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஸவூதி ராஜ்யத்தின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட நாட்காட்டியின்படி, ஷவ்வாலின் முதல் நாளான ஈத் அல்-பித்ர், இந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 30 ஆகும்.

தொலைநோக்கிகள் போன்ற ஒளியியல் உதவியுடன் கூட, சனிக்கிழமை சந்திரனைப் பார்ப்பது சாத்தியமில்லை என்று வானியலாளர்கள் கூறுகின்ற நிலையிலும், பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகள் ஸவூதி அரேபியாவைப் பின்பற்றி 30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை  ஈத் தினத்தைக் கொண்டாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஷவ்வால் பிறை நிலவு தென்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஈத் அல் ஃபித்ர் 30ம் திகதி கொண்டாடப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஸவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள்,  30ம் திகதி ஈத் அல் ஃபித்ர் கொண்டாடுகின்றன. ஏனையவர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்திரனைப் பார்த்து ஈத் பண்டிகையை 31ம் திகதி கொண்டாடுவர்.
உலகின் 70% முஸ்லிம்கள் திங்களன்று பெருநாள் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது!

செம்மைத்துளியான்


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments