
நரகத்தை அஞ்சுகிறேன்.
சுவனத்தை ஆசை வைக்கிறேன்.
சுவனத்தில் சுகபோகம் ஏராளம்.
அதில் கொஞ்சமே
எனக்கு இருந்தாலும் போதும்.
அதற்காக என்னிலும்
இருக்கிறது ஒரு ஆசை
அதைத் தாண்டி இருக்கிறது
ஒரு பேராசை.
சுவனத்தின் நாலா பக்கமும்
பலஸ்தீன ஷஹீதுகள் இருப்பார்கள்.
அவர்கள் ஒரு காட்சியை
பார்த்துப் பார்த்து ரசிப்பார்கள்.
அங்கே
தம்மை கொன்று ஒழித்த
இஸ்ரேலிய பாவிகள்
நரக நெருப்பில்
கருகிக் கதரிக் கொண்டு இருப்பார்கள்.
அந்த யூதர்களும்
உடந்தையான அரபுக்களும்
நரகில் படும் பாட்டை
நானும்தான் அங்கு
பார்த்து ரசிக்க வேண்டும்.
இந்த பேராசைதான்
எனக்கும் நிறைவேற வேண்டும்.
உள்ளத்தால்
உருகுகின்றேன்.
கண்களில்
கண்ணீரை வடிக்கின்றேன்.
கையால் ஆகாதவனாய்
நொந்து போகிறேன்.
பலஸ்தீன மக்கள்
படும் துயர்கள் கண்டு
பரிதவிக்கின்றேன்.
யா அல்லாஹ்!!!
நீ அறியாமல்
ஒன்றும் இல்லை.
என்றாலும்
என் உள்ளம்
தாங்குவதும் இல்லை.
சுவனம் கிடைக்கும் பூமியில்,
அவர்களுக்கும் சுதந்திரம்
வழங்கிடுவாய் யா அல்லாஹ்!
கண்ணீரோடு கையேந்துகிறேன்.
கைவிடாதே யா அல்லாஹ்!.
Dr. Ajmal hassan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments