Ticker

6/recent/ticker-posts

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு


திபெத்தில் இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 11.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 28.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 87.47 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும் நில அதிர்வு மையம் கூறியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
ஷிகாட்சே நிலநடுக்கம்:
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாகக் கருதப்படும் திபெத் பகுதியில் இமயமலையை ஒட்டி உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது.

சென்ற ஜனவரி மாதம் 7ஆம் தேதி திபெத்தில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷிகாட்சே நகரை மையமாக கொண்ட அந்த நிலநடுக்கத்தில் 120 பேருக்கு மேல் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.

asianetnews

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments