
Citigroup நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிற்குத் தவறுதலாக 6 பில்லியன் டாலர் (8 பில்லியன் வெள்ளி) மாற்றப்படவிருந்ததைத் தடுத்துள்ளது.
ஊழியர் ஒருவர் கவனக்குறைவாக வாடிக்கையாளரின் கணக்கு எண்ணை தொகையைக் குறிப்பிடும் பகுதியில் நிரப்பியதாக Bloomberg செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அதனால் வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய தொகையைப்போன்று 1000 மடங்கு கூடுதலான தொகை அனுப்பப்பட்டிருக்கக்கூடும்.
சம்பவம் சென்ற ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் நிகழ்ந்தது.
அதே மாதத்தில் வேறொரு வாடிக்கையாளரின் கணக்கிற்குத் தவறுதலாக 81 டிரில்லியன் டாலர் (108 டிரில்லியன் வெள்ளி) அனுப்பப்பட்டதாக Bloomberg சொன்னது.
அதுபோன்ற தவறுகள் மேலும் நடப்பதைத் தடுக்க புதிய மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.
சம்பவம் குறித்த அறிக்கையில் ஊழியரின் தவறு விரைவாக அடையாளம் காணப்பட்டு தொகை சரிசெய்யப்பட்டதாக நிறுவனம் கூறியது.
மனிதத் தவறுகளைத் தவிர்ப்பதற்குத் தானியக்க முறைகளைப் பயன்படுத்தும் முயற்சி தொடர்வதாக Citigroup நிறுவனம் சொன்னது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments