Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஏறாவூரில் ஓரினச்சேர்க்கையால் நடந்துள்ள விபரீதம்!


ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம்  கோரிய 21 வயது இளைஞன் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள பாடசாலை ஒன்றில் 2014ம் ஆண்டு அதிபராக கடமையாற்றி வந்தபோது  வேறு ஒரு பாடசாலையில் கல்விகற்று வந்த சிறுவன், அங்கு சிறுமி ஒருவருடன் ஏற்பட்ட தகாத முறையினால் அவரை கைது செய்து பின்னர் அங்கிருந்து குறித்த அதிபரின் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டு  அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த சிறுவனுடன் அதிபர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், அதிபர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளதுடன் சிறுவனும் பாடசாலை கல்வியை முடித்து வெளியேறியுள்ள நிலையில், இருவரும் தொடர்ந்து ஓரினச்செர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ள போது அதனை குறித்த இளைஞன் வீடியோ எடுத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த இளைஞன் ஓய்வு பெற்ற அதிபரிடம் வீடியோவை வெளியிடுவேன் என அச்சறுத்தி 9 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரிய நிலையில் இளைஞனிடம் பணம் வழங்கியதற்கான கடிதம் ஒன்றை வாங்கி கொண்டு அந்த பணத்தை அதிபர் அவருக்கு வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் குறித்த இளைஞன் ஓய்வு பெற்ற 63 வயதுடைய அதிபரிடம் மீண்டும் தனக்கு 5 லட்சம் ரூபா பணம் தருமாறும் அல்லது வீடியோவை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து 25 ஆயிரம் ரூபா மட்டும் தருவேன் என தெரிவித்துவிட்டு தனக்கு நேர்ந்த கதி தொடர்பாக பொலிசாரிடம் ஓய்வு பெற்ற அதிபர் முறைப்பாடு செய்த நிலையில், பொலிசாரின் ஆலோசனைக்கமைய குறித்த இளைஞனை வெளியிடம் ஒன்றுக்கு அதிபர் வரவழைத்து பணத்தை வழங்கும் போது அங்கு மாறவேடத்தில் இருந்த பொலிசார் அந்த இளைஞனை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

adaderanatamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments