Ticker

6/recent/ticker-posts

6-ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும்!


13. நோன்பாளி பல்துலக்குதலில் குற்றமில்லை

1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உ@ச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, நஸயீ

2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவுக்கு பல் துலக்குவதை நான் பாhத்திருக்கிறேன் என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: பல் துலக்குவது நபியவர்கள் மிகவும் வலியுறுத்துகின்ற நடைமுறையாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது, அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்று கூறுவது ஆதாரமற்றதாகும்.

14. நோன்பாளியின் உளு

1) அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி(ஸல்)அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்குக்குத் தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத்

விளக்கம்: நோன்புநோற்றவர் உளுச் செய்தால் நாசிக்கும் வாய்க்கும் தண்ணீர் செலுத்தும்போது அடித்தொண்டை இன்;னும் அடிமூக்கு வரைக்கும் தண்ணீரைச் செலுத்தாமல் நோன்பில்லாத நேரத்தில் செய்வதை விட குறைத்துச் செய்ய வேண்டும். அடிமூக்கு அடித்தொண்டை வரைக்கும் தண்ணீரை செலுத்தினால் வாய்க்குள் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது. 

(தொடரும்)

கே.எல்.எம்.இப்ராஹீம் (மதனீ)


 



Post a Comment

0 Comments