
தமிழ்நாடு பட்ஜெட் உரையில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் 'விடியல் பயணம்' திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு பட்ஜெட் உரையில் மகளிர் உரிமை தொகை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுவதற்காக சட்டப்பேரவை கூடியது. அப்போது பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் 'விடியல் பயணம்' என்ற மகத்தான திட்டமும் ஒன்று. தமிழ்நாட்டு மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம், பேருந்துப் பயணம் செய்வோர்களில் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும், சராசரியாக 50 லட்சம் மகளிர், பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
மகத்தான இத்திட்டத்தினால் பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான மானியத் தொகை 3,600 கோடி ரூபாயை 2025-28 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது. மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் அறிவிக்கப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது. அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments