Ticker

6/recent/ticker-posts

Ad Code



விவசாயிகளுக்கு உர மானியம் : வெளியான மகிழ்ச்சி தகவல்


தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Vidyaratne) தெரிவித்துள்ளார்.

அதன்படி இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2024 நவம்பர் மாதத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

கமநலக் காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அன்மையில் வெளியிட்ட  அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 53,511 விவசாயிகளுக்கு 61,071 ஏக்கர் விவசாய நிலங்களுக்காக 952 மில்லியன் ரூபாய் நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ibctamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments