Ad Code



உம்ரான் மாலிக் இப்படி ஒரே அடியாக காணாமல் போக இதுதான் காரணம் – டேல் ஸ்டெயின் கருத்து


இந்திய அணியின் இளம் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டும் இன்றி மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக பந்துவீச்சினை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 

அவரது இந்த அதிவேக பந்துவீச்சு காரணமாக விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. உம்ரான் மாலிக் சரிவை சந்திக்க இதுவே காரணம் : டேல் ஸ்டெயின் அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனாலும் அதிவேகமாக பந்துவீசும் அவர் தனது பந்துவீச்சு லைன் மற்றும் லென்த்தை தவறவிட்டதால் அதிக அளவில் ரன்களை கசிய விட்டார். பின்னர் சிறிது காலத்திலேயே அவரது துல்லியத்தையும் கட்டுப்பாட்டையும் இழந்தார். 

இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் சரிவை சந்தித்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் 26 போட்டிகளை விளையாடியுள்ள அவர் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் ரன்களை வாரி வழங்கியதால் அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் மிகப்பெரிய பந்துவீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இப்படி சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து முன்னாள் சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பெராரி காரில் ஆறு கியர்கள் இருக்கும்.  ஆனால் அதை எப்போதுமே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முதல் மூன்று கியர்களை மட்டும் பயன்படுத்தி வண்டியை ஓட்ட வேண்டும். அதுபோலதான் வேகபந்து வீச்சாளர்களும் இருக்க வேண்டும். தங்களுக்கு என்ன தேவையோ அந்த வேகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

ஆனால் மைதானத்தில் இருக்கும் 60 ஆயிரம் ரசிகர்களை கரகோஷமிட வைக்க வேண்டும் என்பதற்காகவே 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச முயற்சித்து தோற்றுப் போகிறார்கள். இப்படி இருந்தால் இரண்டு போட்டிகளுக்கு பிறகு உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகலாம். அப்படித்தான் உம்ரான் மாலிக் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார் என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments