
என்னது சென்னையிலிருந்து லூப் ட்ரெயின் மூலம் திருச்சி போக வெறும் 25நிமிடங்களா? மதுரை போக 35 நிமிடங்களா?
என்ன சார் நம்ப முடியலையே என்று நீங்கள் நினைத்தால் அது தான் உண்மை.
நம்மில் பல பேருக்கு ரயில் போக்கு வரத்து முதன்மையானது.
திருச்சிக்கு 7மணி நேரமும் மதுரைக்கு 9 மணி நேர போக்குவரத்து இருந்த இடத்தில் இனி வெறும் 30 நிமிடம் தான்!
ஹைப்பர்லூப் என்பது வெற்றிடக் குழாய்களில் காந்தத் தாங்குதலை (Magnetic levitation) பயன்படுத்தி, மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய அதிவேகப் போக்குவரத்து முறையாகும்.
இந்தத் தொழில்நுட்பம் மூலம், சென்னை முதல் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு வெறும் 30 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும்.
இந்தியாவில், இரயில்வே நிர்வாக ஒத்துழைப்புடன் சென்னை ஐஐடி (IIT Madras) ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் முன்னணி ஆராய்ச்சியில் கண்டுபிடிப்புதான் இந்த Hyperloop train.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தையூரில் 450 மீட்டர் நீளமான சோதனைப் பாதையை உருவாக்கியுள்ளனர். இந்தச் சோதனைப் பாதை, ஹைப்பர்லூப் ரயில்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை ஐஐடி, ஆசியாவில் முதன்முறையாக 'உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி' (Global Hyperloop Competition) என்ற சர்வதேச நிகழ்வை சமீபத்தில் நடத்தியுள்ளது.
இந்தப் போட்டி, உலகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, ஹைப்பர்லூப் தொடர்பான புதுமையான தீர்வுகளை முன்மொழிய உதவியது.
இந்த முயற்சிகள், இந்தியாவில் அதிவேகப் போக்குவரத்து முறைகளை நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான முன்னேற்றங்களாகும். இவை, நீண்ட தூரப் பயண நேரத்தை குறைத்து, பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவும்.
வரும் 2030 ஆண்டுக்குள் இந்தப் போக்குவரத்துத் தொடங்கலாம் என அறிவித்துள்ளது. வருங்காலங்களில் பயண நேரம் குறைவு என்பது மகிழ்ச்சிதானே?
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments