
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி முள்ளான்பூரில் 22வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 219-6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 0, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 4, நேஹல் வதேரா 9, மேக்ஸ்வெல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் சிஎஸ்கே பவுலர்களை வெளுத்து வாங்கிய 24 வயது வீரர் பிரியான்ஸ் ஆர்யா 19 பந்தில் 50 ரன்கள் தொட்டார். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 39 பந்துகளில் சதத்தை அடித்து 103 (42) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் சேர்ந்து கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடிய சசாங் சிங் 52* (36), மார்கோ யான்சென் 34* (10) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.
சுமாராக பௌலிங் செய்த சென்னைக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 2, அஸ்வின் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய சென்னைக்கு இம்முறை பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக விளையாடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரச்சின் ரவீந்திரா 36 (23) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜ் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த சிவம் துபே மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 42 (27) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய கான்வே அரை சதத்தை அடித்து போராடினார்.
அடுத்ததாக தோனி பேட்டிங் செய்ய வந்த நிலையில் மறுபுறம் கான்வே மெதுவாகவே விளையாடியதால் சென்னைக்கு தேவைப்படும் ரன் ரேட் அதிகரித்தது. அதன் காரணமாக 69* (49) ரன்னில் கான்வே சிஎஸ்கே அணிக்காக ரிட்டையர்ட் அவுட்டாகி சென்ற முதல் வீரர் என்ற பரிதாப சாதனையுடன் வெளியேறினார்.
கடைசியில் தோனி போராடியதால் கடைசி ஓவரில் சென்னைக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்திலேயே தோனி 27 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ஜடேஜா 9* (5) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 201-5 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை தங்களது 4வது தோல்வியை பதிவு செய்தது.
மறுபுறம் 18 ரன்கள் வெற்றி பெற்ற பஞ்சாப் தங்களுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. மறுபுறம் 2019க்குப்பின் 180+ ரன்களை துரத்திய 11 வது போட்டியில் சென்னை தொடர்ந்து 11வது தோல்வியை சந்தித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments