
பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் எதிர்கொள்ளும் வீட்டு வாடகை பிரச்சனை, ஸ்பெயினில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வைத்துள்ளது.
உலகிலேயே அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடு ஸ்பெயின். இங்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். மாட்ரிட் போன்ற பெருநகரங்களிலும், பார்சிலோனா போன்ற கடலோர நகரங்களிலும் தற்காலிகமாக வந்து தங்கும் இந்த சுற்றுலா பயணிகளால் வீட்டு வாடகை தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், வருமானம் உயராத தங்களால் வீட்டு வாடகை கட்ட இயலவில்லை என்று குற்றஞ்சாட்டி ஸ்பெயின் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேனரி, பலேரிக் உள்ளிட்ட தீவுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், உள்ளூர் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments