Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-186


குறள் 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

நல்ல நல்ல பண்புகளைக் கொண்டவங்க, நாட்டுல  நடக்க அநீதியை பொறுக்கமாட்டாம எதுத்து பொங்கி எழுந்தாக்கா, ஆட்சி செய்றவன் இடையிலேயே பதவியை இழந்து போவான். 

குறள் 900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

ஒருத்தங்கிட்ட எம்புட்டு வசதி வாய்ப்பு இருந்தாலும் சரி, அவனை எதுத்து நல்லவங்க பொங்கி எழுந்துட்டா அதை அவனால சமாளிக்க முடியாது.

குறள் 901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

தன் குடும்பத்தைப் பத்தியே நெனைய்க்கவனால நற் பயன் பெற முடியாது. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் படைக்கணும்னு நெனைய்க்கவங்க அதை விரும்பமாட்டாங்க. 

குறள் 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

ஒருத்தன் தன்னோட வாழ்க்கையை பேணாமல் பெண்கள் பின்னால் அலைந்தால் அவன் நிலைமை வெட்கப் படக்கூடியதா ஆயிரும். 

குறள் 904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

குடும்ப வாழ்க்கையோட இன்பத்தை அனுபவிக்காம,  வீட்ல உள்ளவொளுகு பயந்து நடுங்குத மனுசனோட செயல்பாடுகள்லாம்  சிறப்பா அமையாது. 

(தொடரும்) 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments