Ticker

6/recent/ticker-posts

மனதின் ஆசைகளும்! கொலுசின் ஓசைகளும்!


ரகசியமாய் மனம்
எழுப்பிடும் ஆசையை .
சத்தமிட்டுக் கூறிடும்
அவன் காதிலே .
மெல்லன நகர்ந்து
நோக்கிட நினைக்கையிலே.
கொலுசின் ஓசைகளோ
உசுப்பியே எழுப்பி
விட்டு விடுகிறதே பாட்டியை.
ஓசையில்லாக் கொலுசு
கொண்டு வந்திடு.
ஆசைகளை நடுராத்திரியில்
நின்று உரைத்திடலாம் .
மண்டு மாமனே தண்டுக்
காலும் பாவமடா.
மயக்கம் தெளிந்திட
நெருக்கம் வேணுமடி.
பொறுத்தது போதுமடி
அறுத்தெறி ஓசையை
கொஞ்ச நாளிகை வரையுமடி
கண்ணே கண்ணுமனியே.

ஆர் எஸ் கலா

Email;vettai007@yahoo.com




Post a Comment

0 Comments