
440. வினா : எது நமக்குக் கடன்?
விடை : சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய நற்செயல்கள்
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.(981)
441. வினா : சான்றாண்மையின் உரைகல் எது?
விடை: தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பண்பாகும்
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.(986)
442. வினா : யாருடைய பண்பைப் பாராட்டும் உலகு?
விடை : பிறருக்கு பயன்பட வாழும் நல்லவரது பண்பை
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு.(994)
443. வினா : உலகம் யாரால் நிலைத்து உள்ளது?
விடை : நற்பண்பாளர்களால்
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.(996)
444. வினா : இவ்வுலகம் இருட்டாயிருப்பது யாருக்கு?
விடை : பிறருடன் சிரித்து மகிழ்ந்து வாழாதவர்க்கு
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.(999)
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments