Ticker

6/recent/ticker-posts

இத்தாலியில் 2 மாணவிகள் கொலை - மக்கள் கண்டனம்


இத்தாலியில் 48 மணிநேரத்திற்குள் 2 மாணவிகள் கொலைசெய்யப்பட்டது அங்குப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை (31 மார்ச்) மெஸ்ஸினா (Messina) நகரத்தில் 22 வயது மாணவி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் கத்தியால் குத்தப்பட்டார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவரைக் கொலை செய்த சந்தேகத்தில் கைதான 27 வயது சக மாணவர் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் புதன்கிழமை (2 ஏப்ரல்) மேலும் ஒரு 22 வயது மாணவியின் சடலம் தலைநகர் ரோமில் கண்டெடுக்கப்பட்டது.

காட்டுப்பகுதி ஒன்றில் பயணப் பெட்டியினுள் அவரது சடலம் காணப்பட்டது.

மார்ச் 23ஆம் தேதி முதல் காணாமல்போன அவரைக் கொலை செய்த சந்தேகத்தில் 23 வயதுக் காதலர் கைதுசெய்யப்பட்டார்.

ஆண்டின் தொடக்கம் முதல் 11 பெண்கள் இத்தாலியில் கொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு இத்தாலியில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 113 என்று தெரிவிக்கப்பட்டது.

seithi

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments