Ticker

6/recent/ticker-posts

எல்லாமே செஞ்சு பாத்துட்டோம்.. சிஎஸ்கே ஹாட்ரிக் தோல்வியை சந்திக்க இதான் காரணம்.. ருதுராஜ் கவலை பேட்டி


ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 17வது போட்டியில் சென்னையை 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 184 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 77, அபிஷேக் போரேல் 32 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக கலீல் அகமது 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக களமிறங்கிய சென்னை மீண்டும் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 158/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரச்சின் 2, கேப்டன் ருதுராஜ் 5, கான்வே 13, துபே 18, ஜடேஜா 2 என முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல விஜய் சங்கர் 69*, தோனி 30* ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.

அதனால் 15 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லியிடம் தோற்ற சென்னை இந்த வருடம் 4 போட்டிகளில் 3வது தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக கடைசி 3 போட்டிகளில் சென்னை ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்துள்ளது. டெல்லிக்கு அதிகபட்சமாக விப்ராஜ் நிகாம் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் தம்மால் முடிந்த அனைத்து மாற்றங்களை செய்து பார்த்தும் இந்தத் தோல்விக்கான காரணம் பற்றி கேப்டன் ருதுராஜ் கவலையுடன் பேசியது பின்வருமாறு. “கடந்த சில போட்டிகளாக எதுவும் எங்கள் வழியில் செல்லவில்லை. நாங்கள் முன்னேறி சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம். ஆனால் அது எங்களது வழியில் செல்லவில்லை. பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழப்பதும் அதிக ரன்கள் கொடுப்பதும் பெரிய பிரச்சனை”

“அங்கே நாங்கள் 15 – 20 ரன்கள் எக்ஸ்ட்ரா கொடுக்கிறோம் அல்லது நிறைய விக்கெட்டுகள் இழக்கிறோம். அதில் முன்னேற முயற்சித்தும் நடக்கவில்லை. பவர் பிளேவில் யார் பௌலிங் செய்தாலும் நாங்கள் சற்று கவலைப்படுகிறோம் என்று நினைக்கிறேன். பவர்பிளேவில் பேட்டிங்கில் நாங்கள் அதிக விக்கெட்டுகள் இழக்க விரும்புவதில்லை. ஆனால் நேர்மறையாக இருக்க விரும்புகிறோம்”

“இது பின் காலில் இருப்பது மற்றும் கால் விரல்களில் இல்லாதது என்று நினைக்கிறேன். வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பாக விளையாட வேண்டும். பவர் பிளே முடிந்ததும் நாங்கள் போட்டியை பிடிக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் அங்கே நீண்ட தொலைவிற்கு சென்று விடும் எங்களுக்கு கடைசியில் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே இருக்கிறார். டெல்லி அணி சூழ்நிலைகளை நன்றாக பயன்படுத்தி பௌலிங் செய்தது. சிவம் துபே பேட்டிங் செய்த போதும் நாங்கள் வேகத்தை பிடிக்க முயற்சித்தோம். ஆனால் அது எங்களுக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

crictamil

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments