
நண்பர்கள் இணைப்புத் தழுவலிலிருந்து தம்மை விடுபடுத்திக் கொண்டு ஜமுக்காலத்தில் அமர்ந்தனர்! அவர்களது பிரத்தியேகக் கலந்துரையாடலுக்கு இடைச் சொறுவல் கொடுக்காமல், அவர்களைத் தனியே விட்டுவிட்டு, ரெங்க்மா அங்கிருந்து நகர்ந்தாள், அடுக்களை நோக்கி!
இர்வின் அருகில் உரசி அமர்ந்தான் செரோக்கி! நீண்ட நாளைக்குப் பின்னரான அவர்களது சந்திப்பு களைகட்டியது!
இருவரும் பலதையும் பேசித்தீர்த்து, தமது ஆசுவாதங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்!
ஜாகையைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெங்க்மாவின் தாய், மகள் நளினமாய் நடந்து வருவதைப் பார்த்துத் தனக்குள் களிப்படைந்தவளாக, மகளது முகத்தைத் தொட்டுத் தடவிய தன் கரங்களை முகத்தில் ஒத்திக்கொண்டாள்.
எப்போதுமில்லாமல் தாய் தன் முகத்தைத் தடவிக் கொடுத்தது ரெங்க்மாவுக்கு வியப்பாக இருந்தது! மேலும் வலுவடைந்த தாயினது களிப்பு, மகளை ஆரத்தழுவி அணைத்துக் கொள்ள வைத்தது. ரெங்மாவும் தாயின் அணைப்பில் புலங்காகிதமடைந்தாள்!
தன் மகள் தன்னிடமிருந்து விடைபெற்று, இன்னொரு ஜாகைக்கு வாழ்க்கைப்படப் போகிறாள் என்ற சோகம் கலந்த களிப்பினால் தாயின் கண்கள் நீர் சொரிந்தன!
அதனை மகளுக்குக் காட்டிக்கொள்ளாமல் மெல்லத் திரும்பி விரல்களால் கண்ணீரைத் துடைத்து விட்டுக்கொண்டாள்!
தாயின் அணைப்பில் கொஞ்சநேர சுகம் கண்ட ரெங்க்மா, அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவளாக, தும்மேசையில் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்த இறைச்சித் துண்டொன்றைப் பிய்த்தெடுத்து வாயிலிட்டு மென்றுகொண்டே, மெதுவாகத் தன்னறை நோக்கி வந்தாள். அவள் அறைக்குள் நுழைந்த நேரம், நண்பர்கள் இருவரும் பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தனர்!
ரெங்க்மா இர்வினைத் தன் புன்னகையால் வழியனுப்பிவைத்தாள்! அவளது புன்முறுவலைத் தனக்குள் ரசித்தபடியே பண்கதவைத் திறந்துகொண்டு வெளியேறிய இர்வின், கிராமத்துக் குடிசைகள் மறையும் வரை அக்கம் பக்கம் பார்க்காமல் விரைந்து நடந்தான்.
குறுகலாகக் காணப்பட்ட நடைபதையின் ஓரங்களில் அங்காங்கே குபுக்கற்களுக் கிடையே மரவேர்கள் ஊடரறுத்திருந்ததால், பாதசாரிகள் உட்கார்ந்து கொள்வதற்கு வசதியாக இருந்தது! நீண்ட தூர நடையினால் களைத்துப்போன இர்வின் வேர் ஒன்றில் அமர்ந்து இளைப்பாறினான்!
“மூத்தவர்” வனத்துக்குள் நுழைந்து தன் வாழ்க்கையை ஆரம்பித்த இடமான, தற்போது செரோக்கி வாழ்விடமாக்கிக் கொண்டுள்ள குகையை அடைவதற்கு இன்னும் கொஞ்ச தூரமே நடந்தாக வேண்டும்.
அங்கு சென்று அவன் தன் கானகத்து உடைகளை மாற்றிக்
கொண்டு, மறுபடியும் நடந்து, “மரவேரடி”வரை சென்று தன் ஊர்தியில் “மனாஸ் நகர்” நோக்கிச் செல்ல வேண்டும்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments