Ticker

6/recent/ticker-posts

Ad Code



மனித இனத்தின் அழிவு கடும்குளிராலா? 1280 பேரால் மனிதகுலம் உயிர்பிழைத்த வரலாறு


பூமியில் 1280 பேர் மட்டுமே எஞ்சியிருந்த போது 99 சதவீத மக்கள் அழிந்தனர்... இந்த சம்பவம் எப்பொழுது நடந்தது தெரியுமா? 

சுமார் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, 99 சதவீத மனித இனம் அழிந்துவிட்டதாக சீனப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்போது, உலக மக்கள்த்தொகையில்1280 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். பூமியில் 1280 பேர் மட்டுமே எஞ்சியிருந்த போது 99 சதவீத மக்கள் அழிந்தனர் என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கிறது... சம்பவம் எப்பொழுது நடந்தது தெரியுமா?

பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை

இன்று பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 8 பில்லியனை தாண்டியுள்ளது. காடுகள் படிப்படியாக குறைந்து, மனிதர்கள் பெருகி வருகின்றனர். ஆனால் பூமியில் மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருந்த ஒரு காலம் இருந்தது. அந்த நேரத்தில், முழு பூமியிலும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய 1280 பேர் மட்டுமே இருந்தனர். கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு சொல்லும் தரவுகல் இவை.

9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்
சுமார் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் கடும் குளிர் தொடர்ந்து இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மத்திய ப்ளீஸ்டோசீன் சகாப்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காலம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இந்த நேரத்தில், பூமியில் உயிரினங்கள் கணிசமாக அழிந்துவிட்டது. 

பல நூற்றாண்டுகள் தொடர்ந்த கடும்குளிர் 

தொடர் குளிர்காலத்தால், அன்றைய மக்கள்தொகையில், சுமார் 99 சதவீதத்தினர் அழிந்தனர். இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட எண்ணிக்கையில், வெறும் 1280 பேர் மட்டுமே உயிருடன் இருந்ததாக ஆய்வு கூறுகிறது. 

எஞ்சியிருந்த 1280 பேரால் மட்டுமே இன்று மனித குலம் தழைத்தோங்கி இருக்கிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது. எதிர்காலத்தில் மனித இனம் வாழ்வதற்கு வகை செய்த அந்த 1280 பேர் மட்டும் இல்லையெனில் இன்று பூமியில் மனித இனம் இருந்ததற்கான தடயமே இருந்திருக்காது.

டிஎன்ஏ ஆய்வு

சீனாவின் கிழக்கு சீன நார்மல் யுனிவர்சிட்டி, மரபணு மரபியல் ஆய்வு செய்யக்கூடிய மாதிரியை தயாரித்துள்ளது. இந்த மாதிரி மக்கள் தொகையை அளவிடுவதற்கும் வேலை செய்கிறது. சீன விஞ்ஞானிகள், ஆப்பிரிக்க மற்றும் ஆப்பிரிக்கர் அல்லாத மக்களில் 3,154 பேரின் டிஎன்ஏவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம், பூமியில் 1280 பேர் மட்டுமே எஞ்சியிருந்த காலகட்டம் மற்றும் சம்பவங்கள் பற்றி தெரியவந்தது.

இவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்?

மாதிரியிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் பல கேள்விகளை எழுப்புவதாக இந்த ஆய்வோடு தொடர்புடைய யி-சுவான் பான் கூறுகிறார். குளிர்காலத்தில் கூட இந்த 1280 பேர் எப்படி உயிர் பிழைத்தார்கள், அவர்கள் எங்கே தங்கினார்கள்? என்ற கேள்விக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இன்று மனித மனம் வளர்ந்திருந்தாலும், அன்று அப்படி இல்லை. எனவே, அந்த மக்கள் எவ்வாறு தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர் என்பது ஆய்வுக்குரிய விஷயம் என்று யி-சுவான் கூறுகிறார்.

உண்மையில், இந்த ரகசியம் தெரியவந்தால், அது மனித குலம் தொடர்பான பல்வேறு ஐயங்களைத் தீர்த்து வைக்கும் என்று சொல்லலாம்.

Source:zeenews






 



Post a Comment

0 Comments