எனது மனைவியின் வலது கையின் மேல் எலும்பு உடைந்து 6 மாதங்கள் சென்று விட்டன. வயது 59. கல் பென்டேஜ் போடப்பட்டுள்ளது. இன்னும் சரியான குணம் கிடைக்கவில்லை, யுனானி வைத்திய முறையில் ஏதும் தீர்வு உண்டா?
எம்.எச்.ஏ.அஸீஸ், தெமட்டகொடை
நான் சென்ற வாரம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய மாதவிடாய்ச் சக்கரம் நிற்றல் (Menopause) பற்றி விளக்கினேன். வயது கூடும் போது பெண் இனப்பெருக்கத் தொகுதியின் சூலகத்தைத் தவிர உடம்பின் சகல உறுப்புக்களும் பலவீனமடைந்து சென்றாலும் உயிர் வாழும் வரை அவைகள் தொழிற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் சூலகம் மாத்திரம் ஒரு பெண் 40 வயதைத் தாண்டும் போது, அதன் தொழிற்பாடுகளை நிறுத்தி பிள்ளை உருவாகுவதைத் தடுக்கின்றன.
வயது கூடும் போது கர்ப்பிணியாகுவது என்பது ஒரு கஷ்டமான நிலையாகும். எனவே அல்லாஹ்வின் ஒரு நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டு நிலையை இச்செயல் மூலம் உருவாக்கி பெண்களுக்கு தனது இனத்தைப் பெருக்கும் செயற்பாட்டிலிருந்து ஓய்வைக் கொடுக்கின்றான்.
உட்கொள்ளும் உணவும்,தேகப் பயிற்சியும்
மாதவிடாய்க்குப் பின்னரான வாழ்க்கையை பாரிய நோய்களின்றி சுகமாகவும் சந்தோஷமாகவும் கொண்டு செல்வதென்பது நாம் ஆரம்ப காலத்தில் இருந்தே உட்கொள்ளும் உணவிலும் தொடர்ச்சியான தேகப் பயிற்சிகளிலும்தான் தங்கியுள்ளது. விசேடமாக எலும்புகளுக்குத் தேவை யான கனியுப்புக்களையும் விட்டமின்களையும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மாதவிடாய் நிரந்தரமாக நின்றதன் பின்னரான வயதிலும் எதுவிதமான பாரிய உடல் நலப் பிரச்சினைகளின்றி சந்தோசமாக வாழலாம்.
அல்லாஹ் எமக்குத் தந்த இயற்கை உணவுகள் இயற்கை விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரித்து உண்ணாமல் பதனிடப்பட்ட மற்றும் செயற்கைப் பொருட்களடங்கிய உணவுகளை உட்கொள்வதனால் எமது முன்னோர்களுக்கு கூட வராத நோய்களைக் கொண்டு இயற்கை நம்மை தண்டிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் ஒன்றுதான் நான் சென்ற வாரம் குறிப்பிட்ட நிரந்தர மாதவிடாய்க்கு பின்னரான (Post menopause syndrome) நோய் நிலையாகும்.இந்நிலையை கூட கவனத்திற் கொள்ளாது அலட்சியமாக இருந்தால் இருதயக் கோளாறுகள் ஒஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) எனப்படும் எலும்பு நோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. இது எமது முன்னோர்களுக்கு இல்லாத அளவிற்கு தற்போது கூடிக்கொண்டே செல்கின்றன.
பெண்களையே அதிகூடியளவில் பாதிக்கும்
இந்நோய் சில பல காரணங்களினால் ஆண் பெண் இருபாலாரையும் பாதித்தாலும் மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பெண்களையே அதிகூடியளவில் பாதிக்கின்றன. ஒஸ்டியோ போரோசிஸ் ஆண் பெண் இருபாலாரையும் தாக்குவவோடு மதுபானம் அருந்துதல், புகைத்தல், சில மருந்துகளின் பக்க விளைவுகள், ஹோர் மோன்களின் சமமின்மை, உடற்பயிற்சியின்மை என இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
ஆனாலும் மாதவிடாய் நின்றதன் பின்பு ஈஸ்ரஜன் எனும் ஹோர்மோன் குறைபாட்டினால்தான் அதிகமாக இவை ஏற்படுகின்றன. அதிலும் மாதவிடாய் 35 வயதளவில் நிரந்தரமாய் நின்றவர்களை அதிகமாகத் தாக்குகின்றன.
செயற்கைப் பொருட்களடங்கிய மென்பானங்கள் எடுப்பவர்களையும் ஒஸ்டியோ போரோசிஸ் அதிகம் தாக்குகின்றன. எனவே உணவில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் உடற்பயிற்சியும் மிக மிக முக்கியமாகும். காரணம் குருதியில் உள்ள கல்சியம் போன்ற கனியுப்புக்கள் உடற் பயிற்சியின் போதே எலும்புகளிற்குள் செலுத்தப்படுகின்றன.
ஒஸ்டியோபொரோசிஸ்-இன் நோய்க் குறி குணங்கள் ஆரம்பத்திலேயே வெளிக்காட்டுவது இல்லை. நோயின் தீவிரத் தன்மை கூடி எலும்பு முறிவு ஏற்படும்வரை அனேகமானோருக்கு எதுவித குறி குணங்களும் தென்படாது.
ஆனாலும் ஒரு சிலருக்கு இடுப்பு வலி, முதுகெலும்பு ஒரு பக்கத்திற்கு,வளைதல் முழு உடம்பும் பொதுவாக நோவு ஏற்படுதல் போன்ற குறி குணங்கள் இருக்கலாம்.
புரதச்சத்துள்ள உணவுகள்
ஆகவே இந்நோய் நிலை வராமல் தடுக்க புரதச்சத்து மிக்க உணவுகள், மரக்கறி கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை சம அளவில் எடுப்பது முக்கியமானதாகும். மேலும் மென்பானங்கள், கோப்பி எண்ணெயில் பதனிட்ட உணவுப் பொருட்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வேறு ஏதாவது நோய்கள் இருந்தால் அதற்குரிய தகுந்த சிகிச்சையைப் பெற்று நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இங்கு கேள்வி அனுப்பியவர் ஒரு முக்கியமான தகவலைத் தந்துள்ளார். அதாவது பல மாதங்கள் சென்றும் பூரண குணமடையவில்லை என்பதாகும்
எலும்பு முறிவடைந்ததன் பின்பு குணமடைவதில் காலதாமதமேற்படுவதும் ஒஸ்டியோ பொரோசிஸ் இன் ஒரு அறிகுறியாகும். நான் ஏற்கனவே கூறியபடி இந்நிலைக்கு சிகிச்சையளிப்பது என்பது சற்று கடினமான விடயமாகும். காரணம் எலும்பு முறிவுக்கும் ஒஸ்டியோபொரோஸிஸ் ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க வேண்டியுள்ளதால் ஆகும்.
யுனானி வைத்திய முறைப்படி இதற்குச் சிகிச்சையளிக்கும் போது எலும்புகளின் இழந்த கனியுப்புக்களை ஈடு செய்வதற்கான இயற்கை விட்டமின்கள் அடங்கிய உணவுகளும் மருந்துகளுமே பிரதான இடத்தை வகிக்கின்றன.இவைகள் பக்க விளைவுகளை உண்டு பண்ணுவதுடன் வெளிப்பூச்சுக்கான சில விசேட மருந்துகளும் உள்ளன. நாம் வலியைக் குறைப்பதற்கான மருந் துகளைக் கொடுக்காமல் மேற்கூறிய முறைகள் மூலம் எலும்பைப் போஷித்து அதன் மூலம் வலியைக் குறைப்பதே முக்கியம். மாறாக நோயை உள்ளே வைத்துக் கொண்டு வலியைக் குறைப்பதென்பது ஒரு சிறந்த சிகிச்சை முறையல்ல. இது சம்பந்தமாக உங்களது மனைவிக்கு எலும்பு முறிவு சம்பந்தமான யுனானி விசேட வைத்தியர் ஒருவரை சந்திக்க உதவி செய்யலாம்.
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக ஒஸ்டியோபோரோசிஸ் என்ற இந்நோய் வராமல் தடுக்க வேண்டுமாயின் நான் மேற்குறிப்பிட்ட முறைகளை கையாண்டு இந்நிலையில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும்.
DR.NASEEM
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments