
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் பாதுகாக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) மறுத்துள்ளார்.
ஊடக சந்திப்பில் நேற்று (08.04.2025) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிரந்தரமாக ஊனமுற்றவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைவரும் விரும்புகிறார்கள்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
இதில், வெளிநாட்டவர்கள், காவல்துறை உள்ளிட்ட குறைந்தது 272 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன.
ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்ஸ்பரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளில் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments