
கிரீன்லாந்தில் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் நாய் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. கிரீன்லாந்தில் நடைபெறும் பிரபல நாய் பந்தயத்தைக் காண, அமெரிக்க இரண்டாம் பெண்மணி உஷா வான்ஸ் திட்டமிட்டிருந்தார். பின்னர், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கிரீன்லாந்து பயணத்தில் இணைவதாகத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்து வரும் நிலையில், 3 நாட்கள் திட்டமிடப்பட்ட இந்த பயணத்திற்கு கிரீன்லாந்து மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகியோர் கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை மட்டும் பார்வையிட்டு திரும்பினர். இந்த நிலையில், உஷா வான்ஸ் பார்க்க விரும்பிய நாய் பந்தயம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.
இதில் 444 நாய்களும், 37 முஷர்கள் பங்கேற்ற நிலையில் நாய்கள் குழுவாக பனிச்சறுக்கு வண்டியை இழுத்துச் சென்றன. கிரீன்லாந்தின் பாரம்பரியமான இந்தப் போட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments