
சர்வதேச விண்வெளி நிலையத்தில் என்ன பிரச்சனை நிலவுகிறது என்று தங்களுக்குத் தான் தெரியும் என்றும் விரைவில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் மீண்டும் விண்வெளி செல்ல உள்ளதாகவும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தெரிவித்தனர்.
சுமார் 9 மாத பயணத்திற்கு பின் கடந்த வாரம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பினர். இதையடுத்து முதல் முறையாக இருவரும செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும் போது அற்புதமாக இருந்ததாக கூறினார். ஒவ்வொரு முறையும் இந்தியாவின் மேற்பரப்பில் சென்ற போது இமயமலையின் நம்பவே முடியாத புகைப்படங்கள் கிடைத்ததாகவும் கூறினார்.
மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விட்டு வந்த பணிகளை தொடர விரும்புவதாகவும், அதற்காக மீண்டும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். ஸ்டார்லைன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் பிரச்சனை காரணமாக, ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரும் பூமிக்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments