Ticker

6/recent/ticker-posts

IPL 2025 : ஆர்சிபி-யிடமிருந்து வெற்றியை பறித்த கே.எல். ராகுல்.. 6 விக். வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களுருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், விராட் கோலி களம் இறங்கினர். 3.5 ஓவர்களில் ஆர்சிபி 61 ரன்கள் எடுத்ததால், முதல் இன்னிங்ஸில் அந்த அணி எளிதாக 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 37 ரன்களில் சால்ட் ரன் அவுட் ஆனதை தொடர்ந்து, ரன் வேகம் அதிரடியாக குறைந்தது. அடுத்ததாக தேவ்தத் படிக்கல் 1 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி 22 ரன்னும், கேப்டன் பட்டிதார் 25 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லிவிங்ஸ்டோன் இன்றைய ஆட்டத்திலும் 4 ரன்னில் வெளியேறினார். ஜிதேஷ் சர்மா 3 ரன்களும், க்ருனால் பாண்ட்யா 18, டிம் டேவிட் 37 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 163 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். டூப்ளசிஸ் 2 ரன்னிலும், ப்ரேசர் மெக்கர்க் , அபிஷேக் போரெல் தலா 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் டெல்லி அணி 4.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. அதன்பின்னர் இணைந்த அக்சர் படேல் – கே.எல்.ராகுல் இணை விக்கெட்டுகளை காப்பாற்ற போராடியது. அக்சர் 15 ரன்னில் ஆட்டமிழந்தபோது டெல்லி 8.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

பின்னர் இணைந்த கே.எல். ராகுல் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்து. இருவரும் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் பவுண்டரிகளுக்கு விளாசி, விக்கெட்டுகள் விழாதவாறு ரன்கள் சேர்த்தனர்.

குறிப்பாக கே.எல். ராகுல் தனிநபராக டெல்லி அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார். 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி அணி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கே.எல். ராகுல் 53 பந்துகளில் 6 சிக்சர் 7 பவுண்டரியுடன் 93 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 38 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.

news18

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments