
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். கில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது ஆர்ச்சர் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார்.
பின்னர் இணைந்த பட்லர் – சாய் சுதர்சன் இணை பொறுப்புடன் விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பட்லர் 36 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஷாரூக்கான் 2 சிக்சர் 4 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அரைச்சதம் கடந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 3 சிக்சர் 8 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் ராகுல் தெவாதியா அதிரடியாக 24 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 217 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அபாரமாக பந்து வீசிய குஜராத் அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் 41 ரன்களும், ரியான் பராக் 26 ரன்களும், ஹெட்மேயர் 52 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தரவரிசையில் முதலிடத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments