Ticker

6/recent/ticker-posts

Ad Code



சீக்கிரம் படுத்து நீண்டநேரம் தூங்கினால் பதின்ம வயதினருக்கு மூளை கூர்மையாக இருக்கும்: ஆய்வு


சீக்கிரம் படுக்கச் சென்று நீண்டநேரம் தூங்கி எழும் பதின்மவயதினரின் மூளை கூர்மையாக இருக்கும்; அறிவாற்றலும் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

3,000 பதின்ம வயதினர் ஆய்வில் கலந்துகொண்டதாக The Guardian செய்தி கூறுகிறது.

சீக்கிரம் படுத்து நீண்டநேரம் தூங்கி எழுந்தவர்களின் வாசிப்புத் திறன், சொல்வளம், பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவை சிறப்பாக இருந்தது கண்டறியப்பட்டது.

"தூங்கும்போது நினைவாற்றல் வலுவடைகிறது. அதனால் தூக்கமே சிறந்த அறிவாற்றலுக்குக் காரணம் என்று நினைக்கிறோம்" எனக் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியர் பார்பரா சஹாகியன் (Barbara Sahakian) கூறினார்.

சிறந்த தூக்கப் பழக்கத்தைக் கொண்டவர்கள்கூட நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவைக் காட்டிலும் குறைவான தூக்கத்தையே பெறுவதாக ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

13 முதல் 18 வயதுள்ள பதின்மவயதினர் ஒருநாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் தூங்கி எழ வேண்டும் என்று American Academy of Sleep Medicine பரிந்துரைக்கிறது.

seithi


Email;vettai007@yahoo.com

 

Post a Comment

0 Comments