Ticker

6/recent/ticker-posts

Ad Code



2031 வரை இந்தியா வெய்ட் பண்ணுங்க.. இங்கிலாந்துக்கு அள்ளிக் கொடுத்த ஐசிசி.. வெளியான அறிவிப்பு


கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில் 2019ஆம் ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்தியது. அப்போதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் டிராவில் முடிவதில்லை. இதற்கு முன் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐசிசி தனியாக உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தியது தற்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளும் டி20 போட்டிகளுக்கு நிகராக சுவாரசியமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. 2 வருடங்கள் நடைபெறும் அந்தத் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். அந்த இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை பரிசாக கொடுக்கப்படும்.

முன்னதாக 2019இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட போது முதல் 3 இறுதிப்போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது. அதன் படி இங்கிலாந்தில் இருக்கும் சௌதம்டன், ஓவல், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானங்களில் 2021, 2023, 2025 இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. அதில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் கோப்பையை வென்று சாதனை படைத்தன.

அதைத் தொடர்ந்து 2031 வரையிலான அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற ஐசிசி அழைப்பு விடுத்தது. அப்போது இங்கிலாந்துக்கு போட்டியாக இந்திய வாரியமும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஒருவேளை இந்தியாவில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டால் பொதுவான அணிகள் விளையாடும் போது ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைக்காது.

மறுபுறம் இங்கிலாந்தில் பொதுவான அணிகள் விளையாடினாலும் மைதானம் நிரம்பும் அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். அதற்கு கடந்த 2021, 2023, 2025 இறுதிப்போட்டிகளுக்கு இங்கிலாந்து தகுதி பெறாத போதிலும் அங்குள்ள ரசிகர்கள் பொதுவான அணிகளுக்கு போதுமான ஆதரவு கொடுத்தார்கள். அதனால் 2027, 2029, 2031 ஆகிய அடுத்த 3 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளை நடத்தும் உரிமையை மீண்டும் இங்கிலாந்து வாரியத்திற்கு ஐசிசி கொடுத்துள்ளது.

இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில். “2027, 2029, 2031 ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமைகளை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வாரியத்திற்கு வழங்குவதை ஐசிசி உறுதி செய்கிறது. அது சமீபத்திய இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதின் சாதனையைப் பின்பற்றியது” என்று அறிவித்துள்ளது. அதனால் இந்தியா அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு வரை 2031 காத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments