Ticker

6/recent/ticker-posts

குளிர்சாதனப்பெட்டி இல்லாமல் எவ்வாறு ரொட்டியைப் பராமரிப்பது?


குளிர்சாதனப்பெட்டி இல்லாமல் எப்படி ரொட்டி கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்? அதற்குத் தீர்வு கண்டிருக்கிறார் மெக்சிகோவைச் சேர்ந்த உணவு விஞ்ஞானி ராகெல் கோமெஸ் (Raquel Gomez).

திருவாட்டி கோமெஸ் மெக்சிகோவின் பிரபல தொர்தியா (tortilla) ரொட்டியை பராமரிக்கப் புதிய வகை மாவைக் கண்டுபிடித்திருக்கிறார். இதை வைத்து ரொட்டியைத் தயாரித்தால் குளிர்சாதனப்பெட்டி இல்லாமல் ஒரு மாதம் ரொட்டியைப் பராமரிக்கலாம்.

அந்தக் கண்டுபிடிப்பு மெக்சிகோவிலுள்ள ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் என்று திருவாட்டி கோமெஸ் கூறினார்.

குளிர்சாதனப்பெட்டியை வாங்கப் பணம் இல்லாதோர் புதிய வகை தொர்தியா மாவில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

மெக்சிகோவிலுள்ள ஏழை மக்கள் உணவுப் பற்றாக்குறையால் தவிக்கிறார்கள்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 14%க்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது.

seithi

Email;vettai007@yahoo.com

 

Post a Comment

0 Comments