நபி (ஸல்) அவர்களின் சகிப்புத்தன்மை

நபி (ஸல்) அவர்களின் சகிப்புத்தன்மை


அல்லாஹ்வின் 
தூதர் சகிப்பாளர்களின் தலைவராக இருந்துள்ளார்கள். தனது அழைப்பை பரப்பும் பணியில் சொல்லொனா துன்பங்களை சந்தித்தார்கள், எதிர்ப்பார்த்தவர்களாக அல்லாஹ்விடத்தில் கூலியை பொறுமையோடு இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து இரத்தத்தை துடைத்தவர்களாக, அல்லாஹ்வுடைய தூதர்களில் ஒரு தூதருக்கு அவருடைய சமூகத்தினர் அடித்துக் காயப்படுத்திய சம்பவத்தை கூறியவர்களாக, யா அல்லாஹ்! எனது சமூகத்தினரை மன்னித்து விடு, ஏனெனில் அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியதை நான் இப்போதும் காண்பதைப் போல் இருக்கிறது என்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)

மேலும் ஜுனைது பின் சுப்யான் (ரலி) கூறுகிறார்கள்:
ஒரு யுத்தத்தின் போது நபி (ஸல்) அவர்களின் ஒரு விரல் இரத்தக் காயத்திற்கு உள்ளாகியது, அப்போது அவர்கள் தமது விரலை நோக்கி இரத்தக்காயத்திற்கு ஒரு விரல்தான் உள்ளாக்கப்பட்டாயே இறைவனின் பாதையில் எந்த ஒன்றையும் தவிர, (அதிகமாக) சந்திக்கவில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். (புஹாரி, முஸ்லிம்) 


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post