Ticker

6/recent/ticker-posts

Ad Code



இளம்பெண்ணை ஓட ஓட அரிவாளால் வெட்டிய முதியவர்..! தூத்துகுடியில் பயங்கரம் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு


தூத்துக்குடியில் இளம் பெண்ணை முதியவர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவரது மனைவி சிந்துஜா. இவர்களது பக்கத்து வீட்டு அருகே 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கந்தசாமி வீட்டில் வளர்ந்த வாழை மரத்திலிருந்து வாழை இலை நிஷாந்தின் வளாகத்திற்குள் வளர்ந்து நீண்டது. அதனை நிஷாந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், காலையில் சிந்துஜா வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது கந்தசாமி அரிவாளுடன் வந்து அவரை பின்புறம் கால் மற்றும் கையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிந்துஜா உயிருக்கு பயந்து கூச்சலிட்டபடி ஓட்டம்பிடித்தார். ஆனால் விடாமல் முதியவர் அவரை அரிவாளால் தாக்க முயன்றார்.

சிந்துஜாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் முதியவர் கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments