Ticker

6/recent/ticker-posts

Ad Code



3ஆம் உலகப்போர் வந்தாலும்.. இந்த நாடுகள் சேஃப் - எதெல்லாம் தெரியுமா?


3ஆம் உலகப்போர் வந்தாலும் எந்த நாடுகளெல்லாம் பாதுகாப்பாக இருக்கும் எனப் பார்க்கலாம்.

3ஆம் உலகப்போர் 

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

இந்த மோதல் போராக வெடித்தால், அது உலகளவில் நட்பு நாடுகளையும் ஈடுபடுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், சில பகுதிகள் குறைவாகவே பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

மெட்ரோ அறிக்கையின்படி, அண்டார்டிகாவின் தெற்கு இருப்பிடம், அணுசக்திப் போரின்போது பாதுகாப்பாக இருப்பதற்கான ஏற்ற இடங்களில் ஒன்றாகும். ஐஸ்லாந்து, முழு அளவிலான போரில் எப்போதும் பங்கேற்றதில்லை. இதன் தொலைதூர புவியியல் இருப்பிடம் குறைவாக பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.

நியூசிலாந்து மலைப்பாங்கான நிலப்பரப்பு மூலம் பாதுகாப்பை வழங்குகிறது. சுவிட்சர்லாந்து நிலப்பரப்பு மற்றும் அணுசக்தி முகாம்களால் நன்கு பாதுகாக்கப்படுகிறது. கிரீன்லாந்தின் குறைந்த மக்கள் தொகை, உலகளாவிய மோதலில் அதன் ஆபத்தை குறைக்கிறது.

இந்தோனேசியாவின் சுயாதீன நிலைப்பாடு மற்றும் புவிசார் அரசியல் நிலைப்பாடு, உலகளாவிய மோதல்களில் சிக்குவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் துவாலு, அர்ஜென்டினா, பூட்டான், சிலி, பிஜி, மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளும் பாதுகாப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ibctamilnadu

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments