Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவில் ஆண்களுக்கு அதிகம் வரும் டாப் 5 கேன்சர்! என்னென்ன தெரியுமா?


இந்தியாவில், மிக முக்கிய சவால்களுள் ஒன்றாக இருக்கிறது, புற்றுநோய். இதனால், ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. 2022ஆம் ஆண்டை பொறுத்தவரை, ஆண்களில் சுமார் 6.9 லட்சம் புதிய புற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளனவாம். வாழ்வியல் மாற்றங்கள், சுற்றுச்சூழலின் தாக்கங்கள், மரபணுக்கள் மூலமாக இப்படிப்பட்ட புற்றுநோய்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான புற்றுநோய்கள், முற்றும் நிலை வரை கண்டறியப்படாமலேயே போய் விடுகிறதாம். அப்படி, ஆண்கள் அதிகம் பாதிக்கப்படும் 5 புற்றுநோய்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

வாய்வழி குழி புற்றுநோய்:

இந்தியாவில், ஆண்களிடையே வாய்வழி புற்றுநோய் (Oral Cavity Cancer) அடிக்கடி கண்டறியப்படும் புற்றுநோயாக இருக்கிறது. இது, புகைப்பிடித்தல், குட்கா உபயோகம், பான் மசாலா மெல்லுதல் உள்ளிட்டவற்றால் இந்த புற்றுநோய் வருகிறது. இதற்கு மது அருந்துதல் இன்னொரு குறிப்பிடத்தக்க ஆபத்து ஆகும். மோசமான வாய்வழி சுகாதாரம் அல்லது உடைந்த பற்களில் இருந்து வெளிபடும் நாள்பட்ட எரிச்சல் ஆகியவை இதற்கு இன்னொரு காரணியாக பார்க்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோய்:

இந்திய ஆண்கள், புற்றுநோய் தொடர்பான இறப்புகளில், நுரையீரல் புற்றுநோய் முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதற்கு சிகிரெட் பிடிப்பது முக்கிய காரணமாக இருந்தாலும், புகைப்பிடிக்காதவர்களும் இதில் சிக்குகின்றனர். உள் மற்றும் வெளி காற்று மாசுபாடு காராணமாக சிலருக்கு இந்த புற்றுநோய் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிக புகை வரும் இடத்தில் வாழ்பவர்கள், மற்றும் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த கேன்சர் நோயானது வருகிறதாம்.

உணவுக்குழாய் புற்றுநோய்:

மூன்றாவது இடத்தில் இருக்கும் புற்றுநோய், சுவாசக்குழாய் புற்றுநோய். இது, தொண்டையில் இருந்து வயிற்றை இணைக்கும் உணவுக்குழாயை பாதிக்கிறது. இதில் மிக முக்கிய அறிகுறியாக இருப்பது, எதையாவது விழுங்கும் போது சிரமமாக இருப்பது. சாதம் போன்ற கனமான உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது அதை விழுங்க கடினமாக இருக்கும். அதே போல இந்த நோய் இருப்பவர்களுக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி வெயிட் லாஸ் ஆகும். 

பெருங்குடல் புற்றுநோய்:

இந்திய இளைஞர்களிடையே அதிகம் கண்டறியப்ப்படும் புற்றுநோயாக இருக்கிறது, பெருங்குடல் புற்றுநோய். இவற்றிற்கு மரபணுவும் ஒரு காரணமாக இருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், அதிக சிகப்பு இறைச்சியை எடுத்துக்கொள்வது, உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாடு ஆகியவற்றால் இது அதிகரிக்கிறது. பெருங்குடல் அழற்சி, கிரோன் நோய் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வயிற்று புற்றுநோய்:

ஆண்களிடையே அதிகம் கண்டறியப்படும் புற்றுநோய்களுள் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, வயிற்று புற்றுநோய். இவற்றை ஆரம்பத்திலேயே  கண்டறிவது மிகவும் கடினம் ஆகுமெ. காரணம், இவை காண்பிக்கும் அறிகுறிகள், அஜீரணம் என தவறாக புரிந்துக்கொள்ளப்படுகிறது. பசியின்மை, கொஞ்சமாக சாப்பிட பின்பு வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஆகியவை இதற்கு அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. மலம் கருப்பாகுதல், எடை இழப்பு உள்ளிட்டவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.

zeenews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments