Ticker

6/recent/ticker-posts

இந்த ஒரு வேலையை மட்டும் AIயால் செய்ய முடியாது - ஏஐயின் தந்தை என அழைக்கப்படும் நபர் கணிப்பு


AIயால் இந்த ஒரு வேலையை செய்ய முடியாது என ஏஐயின் தந்தை என அழைக்கப்படும் நபர் கணித்துள்ளார்.

AI தொழில்நுட்பம் நாளுக்குநாள் பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால், பல துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

சிக்கலான அறுவை சிகிச்சை தொடங்கி கணினிக்கு நிரல் எழுதுவது நிறுவனத்திற்கு ஊழியர்களை வரை பல்வேறு வேலைகளை AI செய்து வருகிறது.

ஏற்கனவே பல நிறுவனங்கள் AIயை பயன்படுத்தி சில வேலைகளை செய்ய முடிவதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. 

இந்நிலையில், AI துறையின் பிதாமகன் என கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன், AI யால் ஒரு வேலையை மட்டும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், AI சிந்திப்பதில் சிறந்தவையாக இருக்கலாம். ஆனால் குழாய்களை கையாள்வதில் அவை சிறந்தவை அல்ல. பல அலுவலக வேலைகள் பாதுகாப்பாக இருக்காது.

ஆனால் குழாய்களை சரிசெய்யும் வேலை பாதுகாப்பானதாக இருக்கும். குழாய்களை சரிசெய்வதை தானியாமயமாக்க முடியாது. 

மனிதர்களின் திறன், நிஜ உலக சிந்தனை, கணிக்க முடியாத அமைப்புகளில் சிக்கலைத் தீர்ப்பது போன்றவை தேவை.

குழாயை சரிசெய்பவர் குழாயின் அடியே சென்று, ஒழுகும் நீரை அடைத்து, எந்தவிட கையேடும் இல்லாமல் யோசித்து வேலை செய்ய வேண்டியிருக்கும். AI யால் அதை செய்ய முடியாது.

அவற்றால் இன்னும் ஏணிகளில் ஏறவோ அல்லது வால்வுகளை இறுக்கவோ முடியாது. குழாய்களையோ சரிசெய்வது, தச்சு வேலை போன்ற மனிதர்களின் நேரடி ஈடுபாடு உள்ள வேலைகளை AI யால் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். 

lankasri

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments