Ticker

6/recent/ticker-posts

Ad Code



வடகொரியாவின் அடுத்த தலைவராக முன் நிறுத்தப்படும் ஒரு இளம்பெண்: யார் அவர்?


கடந்த சில மாதங்களாக, வடகொரியாவில் ஒரு இளம்பெண் கவனம் ஈர்த்து வருகிறார்.

ராணுவ நிகழ்ச்சிகள், அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஏவுகணை சோதனைகளில் முக்கிய விருந்தாளியாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடன் பங்கேற்று வருகிறார் அவர். 

யார் அந்த இளம்பெண்?

இப்படி வடகொரியாவின் அடுத்த தலைவராக காட்டப்படும் அந்த இளம்பெண், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜூ ஏ (Kim Ju Ae). 

எதிர்காலத்தில் ஒரு நாள் அவர் வடகொரியாவின் தலைவராக, அதுவும் கிம் குடும்பத்திலிருந்து வடகொரியாவை ஆளும் முதல் பெண் தலைவராக ஆவார் என கருதப்படுகிறது.

விடயம் என்னவென்றால், வடகொரியாவை இதுவரை பெண்கள் யாரும் ஆண்டதில்லை. 

கிம் அரசாங்கத்திலேயே இதுவரை ஒரே ஒரு பெண்தான் முக்கிய பொறுப்பொன்றை வகிக்கிறார். அவர் கிம் ஜாங் உன்னுடைய சகோதரியான கிம் யோ ஜாங் (Kim Yo Jong).

ஆக, பெண் ஆட்சியாளர்களுக்குப் பழகாத வடகொரியாவை, அடுத்து ஆளப்போகிறவர் தன் மகள் என்னும் விடயத்தை அழுத்தமாக பதிவு செய்வதற்காகவே கிம் ஜாங் உன் தன் மகளை, ராணுவ நிகழ்ச்சிகள், அரசு விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஏவுகணை சோதனைகளில் பங்கேற்க வைக்கிறார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். 

அதற்கேற்ப, தன் நடை உடை பாவனைகளில், ஏன் கைதட்டும் முறையில் கூட மாற்றங்களைக் காட்டிவருகிறார் கிம் ஜூ ஏ!

lankasri

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments