
மந்திரி அந்த வார்த்தையைக் கூறியதும் மகாராணி மனம் என்னவோ போல் ஆயிற்று .
'சீ என்ன? இந்த மந்திரி இப்படி உரைத்து விட்டார். நான் எப்போது அநாகரியமாகக் கடமை மறந்து பண்பாடு மறந்து நடந்து உள்ளேன்.
ஒரு வைத்தியர் முன் இப்படி என்னைப் பார்த்து உரைத்து விட்டாரே
ஒன்றும் செய்ய முடியாதே மூத்தவர் வயதில் அடுத்து அவர் அறிவுரை எமக்குத் தேவை அதற்காக எல்லாவெற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கு'
என சற்று நேரத்துக்குள் மனதில் சலித்துக் கொண்டார் மகாராணியார்.
அப்போது திடிரென இருக்கை விட்டு எழுந்த மந்திரியார் தலை குனிந்து மகாராணியைப் பார்த்து
"அரசே என்னை மன்னித்து விடுங்கள். தங்களைப் பார்த்து நான் அப்படிக் கூறியதும் தங்களின் முகம் மாறியதைக் நான் கவனித்தேன்.
உங்களுக்கு அந்த வார்த்தை காயப் படுத்தி இருக்கும் என்பதை நான் அறிவேன். காரணம் தாங்களும் சரி நம் மன்னரும் சரி ஆட்சியில் எந்தக் குறையும் கூறும் வண்ணம் ஆளுமை செய்யவில்லை.அதை நான் நங்கு அறிவேன். அப்படி இருக்க தங்களிடம் குறை கண்டது போல் நான் திடிரென அப்படிக் கூறியவை தங்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கும் என்பதை
நான் அறிவேன். அரசே மீண்டும் மன்னிப்பைக் கூறி நாங்கள் வந்ததன் நோக்கையும் கூறுகிறேன்.அப்போது தாங்களே புரிந்து கொள்வீர்கள்.என்னையும் மன்னித்து விடுவீர்கள்."என்று கூறி மீண்டும்
இருக்கையில் அமர்ந்தார் மந்திரி.
உடனே மகாராணி "ஐயோ மந்திரியாரே நான் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான்.அதற்காக பெரும் கோபமோ எரிச்சலோ கொள்ளவில்லை.
சற்று குழப்ப நிலைக்குச் சென்று விட்டேன் அவ்வளவுதான். எனக்
கூறி மந்திரியை சமாதானம் செய்து வைத்தார் .
"மகிழ்ச்சி அரசே என்ற மந்திரி மருத்துவர் தங்களிடம் ஏதோ தனக்கான ஆசையைக் கூறிக் கொள்ளவே இங்கு என்னை அழைத்து வந்தார்.
அவரிடம் நீங்களே கேளுங்கள் அரசே" என்ற மந்திரி குமரனைப் பார்த்து "மருத்துவரே கூறுங்கள். உங்கள் வேண்டுகோள் பற்றியும் ராஜகுமாரியின் நிலை பற்றியும் அரசிக்குப் புரியும் படியே" என்றார்.
"சரி நன்றி மந்திரி அவர்களே,"என்ற குமரன் மகாராணியைப் பார்த்து இரு கை கூப்பி விட்டு தான் எதற்காக இச் சந்திப்பை விரும்பினான் என்பதைச்
சொல்லி விட ஆரம்பித்தான்.
"அரசே நான் இன்று வீட்டுக்குச் செல்லும் முன் சபையைக் கூட்டி என்னோடு இங்கே வருகை தந்த அனைத்து மருத்துவர் முன்நிலையிலும் சன்மானம்
தந்து எனக்கான தொழிலுக்கும் கடமைக்கும் மதிப்பளிக்கும் வண்ணம் சந்தோசமாய் நீங்கள் வழி அனுப்ப வேண்டும் .இவை என் சிறு எதிர்பார்ப்பு அப்படியே உங்கள் பட்டத்து ராணியையும் சபைக்கு அழைத்திட வேண்டும்
அவர்களை மேளதாளத்தோடு அழைத்து வந்து உங்கள் கரத்தில் நான் சபையினர் முன்னே ஒப்படைத்து விட்டு விரைந்திட வேண்டும் .
இவையே என் எதிர் பார்ப்பு. அரசே" என்றவன் இன்னுமா "உங்களுக்குக் குழப்பம் அரசே குழம்பாதீர்கள் நான் இத்தனை பெரிய ஆசையைத் தங்கள் முன் கொண்டு வந்தேன் என்றால் அதற்கு கண்டிப்பாக பெரும் காரணம் இருக்கும் அல்லவா? அரசே" எனக் கூறி சிரித்தவன் .
அதே புன்னகையோடு சொல்லி முடித்தான். "தங்களின் புத்திரி
நலமாகி விட்டார். அரசே" என்று இதைக் கேட்ட மகாராணி எழுந்து
ஓடி வந்து மருத்துவர் கரம் பற்றி
"என்ன? சொன்னீங்க உண்மையாகவா?" எனக் கேட்டு கண்ணீர் மல்க மந்திரியைப் பார்த்து" இவை உண்மை தானே மந்திரியாரே" என்றவர் கை கூப்பி அழுதார் குமரனைப் பார்த்து.
(தொடரும்)
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments