
இரவச்சம்
குறள் மொழி -3
3.தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்.
குறள் எண் : 1065
குறள் மொழியின் பொருள் :
தெளிந்த நீர் போன்ற கூழ் உணவே என்றாலும், தன் உழைப்பால் அதைப் பெற்று உண்பதைவிட இனிமையானது வேறு எதுவும் இல்லை. உதவி கேட்காமல் உழைத்து உண்பதே இனிமை தருவதாகும்.
நபிமொழி
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உலக வாழ்வு ஒளிமிக்கதாகவே விளங்குகிறது. தமது ஜீவனத்திற்காக தாமே உழைத்தார். அதுபோலவே, மற்றவர்களையும் சுயமாக உழைக்கும் படியே உபதேசித்தார். அதுவே கௌரவமாகும் என்றும், பெருமை தரும் என்றும் போதித்தார்.
(பண்டித்கோபால் கிருஷ்ணன் பி.ஏ., பாரத் சமாசார் (இந்தி)
நூல் ஆதாரம்: மாமனிதர் நபிகள் நாயகம் பற்றி மாமேதைகள் - பக்.51
குறள் மொழி 4
குறள் எண் : 33
அறன்வலியுறுத்தல்
4. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்.- குறள் எண் : 33
குறள் மொழியின் பொருள் :
ஒருவன் தன்னால் இயன்றவரை வீண் பெருமையடிக்காமல் இயன்ற வழிகளில் இடைவிடாது நற்செயல்களைச் செய்தல் வேண்டும்.
நபிமொழி :
வீண் விரயமின்றியும்,பெருமையடிக்காமலும்
உண்ணுங்கள்; உடுத்துங்கள்; இயன்ற
வழிகளில் நன்மைகளைச் செய்யுங்கள் (நபி - ஸல்)
அறிவிப்பவர் : இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி)
ஆதாரம் - திருக்குர்ஆன்: 2:195.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments