Ticker

6/recent/ticker-posts

Ad Code



இரவு உணவை ‘இப்படி’ சாப்பிட்டால்..சீக்கிரமே வெயிட் லாஸ் ஆகும்!


இரவில் பல சமயங்களில், பசியால் வயிறு இரையும் சத்தம் கேட்கும். உடனே ஏதாவது ஸ்னாக்ஸ் அல்லது வேறு ஏதேனும் துரித உணவுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்து விடுவோம். இதனாலேயே, பல சமயங்களில் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்தாலும் குறைக்க முடியாமல் போய்விடும். இதற்கென்று நாம் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே, எடையை குறைக்க முடியும். இரவு டின்னர் சாப்பிடுவது, இதற்கு மிகவும் உதவும். அதை, எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இரவு உணவு ஏன் முக்கியம்?

இரவு உணவை மட்டும் கட்டுக்கோப்பாக சாப்பிடுவதால் கண்டிப்பாக உடல் எடை உடனடியாக குறைந்து விடாது. ஆனால், அது நமது உடல் உணவை எப்படி செரிமானம் செய்கிறது என்பதை பொறுத்துதான் இந்த வெயிட் லாஸ் ஆனது அமையும். இதனால் உடலில் ஃபேட் சேருதல், பசியின்மையுடன் உடலில் வைத்திருத்தல் ஆகியவை ஏற்படும். இது, உடலில் சர்காடியன் ரிதம் செயல்பாட்டின் போது ஏற்படும். இது, உங்கள் தூக்கம், உடலின் எனர்ஜி லெவல், ஹார்மோன் செயல்பாடு, மெட்டபாலிசம் மற்றும் செரிமானம் ஆகியவை இரவு நேர டின்னருக்கு பிறகுதான் உற்பத்தியாகும் என்று கூறப்படுகிறது.

எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?

இரவு உணவை, 7 மணிக்குள் சாப்பிட வேண்டும் என்று பிறர் கூறுவதை கேட்டிருப்போம். இந்த நேரத்தில் சாப்பிடுவதால், உறங்க செல்வதற்கு முன்னர் சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆகும். இது, வயிறு உப்பசம், இரவு நேரத்தில் பசி எடுப்பது ஆகியவை தடுக்கும். மேலும், உங்கள் தூக்கத்தின் நிலையையும் அதிகரிக்கும்.

நீங்கள் உறங்கும் போது, உங்கள் உடலில் அதிக நேரம் செரிமானம் அதிக நேரம் வேலை செய்யாமல் போகும். இதுவே, 7 மணிக்கு டின்னர் சாப்பிட்ட பிறகு உங்கள் உடலில் செரிமான செயல்பாடு அதிகரிக்கும். 7 மணிக்கு சாப்பிட்டு விட்டு, அதன் பிறகு எந்த துரித உணவையும் சாப்பிடாமல் இருந்தால், இயற்கையாகவே அது ஒரு ஃபாஸ்டிங் நடைமுறையாக மாறிவிடும். இது, உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது. 

இரவில் தாமதமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

இரவில் நீங்கள் உணவை 9 மணிக்குள் சாப்பிடுபவராக இருந்தால் அது உங்களின் உடல் எடை இழப்பை சற்று கடினமாக்குகிறது. இதனால் உங்கள் உடலில் மெட்டபாலிசம் மெதுவாவதோடு, உங்களுக்கு அதிகம் பசியும் ஏற்படுகிறது. இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவீர்கள். இரவில் நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அது பொதுவாக எண்ணெய் உணவாகவோ, வயிற்றை கெடுக்கும் உணவாகவோ இருந்தால், எடையை குறைக்க இயலாது. 

ஆராய்ச்சிகள்:

இரவு நேரத்தில் உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டில் இது குறித்து வெளியான ஆராய்ச்சிகளில், யாரெல்லாம் 10 மணிக்கு பிறகு சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல, 6-7 மணிக்குள் சாப்பிடுபவர்கள், உடல் எடையை சரியாக சமாளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே போல, தினமும் 7 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு உடலை பழக்கப்படுத்த வேண்டுமாம். அப்படி இல்லை என்றால், நம் உடலுக்கு எதனை எடுத்துக்கொள்வது என்பது தெரியாது என கூறப்படுகிறது.

எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், 7 மணிக்குள் டின்னர்  சாப்பிடுவதுதான் சரி என்று மருத்துவர்களும் ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.

zeenews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments