Ticker

6/recent/ticker-posts

வீடியோ மோகத்திற்கு அடிமையான மனைவி - கணவன் செய்த கொடூரம்!


ரீல்ஸ் வீடியோவுக்கு அடிமையான மனைவியை, கணவன் கொலை செய்துள்ளார்.

கர்நாடகா, ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் புஜாரி(42). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ரேகா(27). பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த ரேகா, ரீல்ஸ் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணேஷ் கோபமாக இருந்துள்ளார். இதனை கண்டுக்கொள்ளாத ரேகா ரீல்ஸ் வீடியோவை பார்த்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் கணவன் கத்தியை எடுத்து, ரேகாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ibctamilnadu

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments