
நாட்டோ நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% பாதுகாப்புக்காக செலவிட ஒப்புக் கொண்டுள்ளன. இது முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இந்த முடிவு ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்தும்.
நட்டோ அமைப்பின் தலைவர்கள், ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) 5% வரை பாதுகாப்பு செலவினத்தை உயர்த்த ஒப்பந்தம் செய்து, அத்துடன் ஒருங்கிணைந்த பாதுகாப்பில் தங்களின் உறுதியான நிலைப்பாட்டை புதுப்பித்துள்ளனர். இந்த தீர்மானம் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பெரும் வெற்றியாகவும், அவரை நீண்டகாலமாக விமர்சித்த ஐரோப்பிய நாடுகளுக்கு புது நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது.
நாட்டோ நாடுகள் புதிய இலக்கு
இந்த ஒப்பந்தத்தின்படி நாட்டோ நாடுகள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5% செலவிடவேண்டும். இதில் 3.5% நேரடி ராணுவம், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கும், மீதமுள்ள 1.5% சைபர் பாதுகாப்பு, முக்கிய கட்டமைப்பு போன்ற பாதுகாப்பு சார்ந்த ஆதரவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இதுதான் காரணம்
ரஷ்யா தொடர்ச்சியாக அச்சுறுத்தும் சூழ்நிலை மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்தி, அமெரிக்கா மீது அதிகமாக சார்ந்திருக்கும் நிலையை குறைப்பது.
டிரம்பின் நிலை
டிரம்ப் தனது பதவிக் காலத்திலிருந்தே ஐரோப்பிய நாட்டுகள் பாதுகாப்பில் குறைவான செலவு செய்து, அமெரிக்க மீது சுமை ஏற்றி வருகின்றன என விமர்சித்தார். இப்போது அவரே இதை “புரட்சிகர வெற்றி” என்று புகழ்ந்துள்ளார். இந்த முடிவு நட்டோவை பாதுகாப்பின் புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்கிறது என நட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறியுள்ளார்.
ஜெர்மனியின் வாக்குறுதி
ஜெர்மனி தற்போது தன்னுடைய 1.7% செலவினத்தை 5% வரை உயர்த்தும் என உறுதி செய்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பாரம்பரிய ராணுவத்தை உருவாக்கப்போகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியின் ஆண்டுவாரியான பாதுகாப்பு செலவு இந்த மாற்றத்தால் US $200 பில்லியன் வரை உயரலாம். இது இந்திய ரூபாயில் சுமார் ₹16,70,000 கோடியாகும்.
ஸ்பெயின் மற்றும் ஸ்லோவாக்கியாவின் சந்தேகம்
பெரிய பாதுகாப்பு செலவுகள் நலத்திட்டங்களை பாதிக்கும் என குற்றம்சாட்டி முழுமையான நிலைப்பாட்டை ஏற்க மறுத்ததுள்ளது ஸ்பெயின். அதேபோல் இது நிதிசார்ந்த சிரமத்தை உருவாக்கும் என கவலை ஸ்லோவாக்கியா தெரிவித்துள்ளது.இருப்பினும், இரு நாடுகளும் பாதுகாப்பு செலவினத்தை ஏற்கெனவே நடப்பில் உள்ள அளவுக்கு மேல் உயர்த்த உறுதியளித்துள்ளன.
எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
ஆயுதத் தொழில்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறும்.புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஐரோப்பியாவே அதிகப்படியான ராணுவ வலிமையை கட்டமைக்கும்.அமெரிக்கா–ஐரோப்பா உறவுகள் புதிய நிலைக்குத் தள்ளப்படும்.
முழு ஒப்பந்த விவரங்கள்
நட்டோவில் உள்ள அனைத்து 32 நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி ஜெர்மனி கிட்டத்தட்ட 17 லட்டம் கோடி ரூபாயும் பிரான்ஸ் சுமார் 10 லட்சம் கோடி ரூபாயும் செலவு செய்யவுள்ளது.
ஜெர்மனி: ₹16.7 லட்சம் கோடி
பிரான்ஸ்: ₹9.8 லட்சம் கோடி
இங்கிலாந்து: ₹10.4 லட்சம் கோடி
இத்தாலி: ₹7.2 லட்சம் கோடி
ஸ்பெயின்: ₹6.1 லட்சம் கோடி
நெதர்லாந்து: ₹2.2 லட்சம் கோடி
அமெரிக்காவுக்கு ஆதாயம்
நாட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஒரணியில் இருப்பது போல் தோன்றினாலும், இது அமெரிக்காவே ஆதாய் அடையும் என கூறப்படுகிறது. அமெரிக்கா தான் தயாரித்து குவித்துள்ள ஆயுதங்களை நாட்டோ நாடுகளுக்கு விற்பனை செய்து கல்லா கட்டும். மேலும் நாட்டோ நாடுகளிடம் இருக்கும் எண்ணெய் வளத்தையும் தேவைப்படும் போதெல்லாம் குறைந்த விலைக்கு வாங்கி குவிக்கும். எந்த ஒரு சர்வதேச நிகழ்வுக்கும் எப்போதும் போல் அமெரிக்காவே காரணமாகவும் காரணகர்த்தாவாகவும் இருக்கும்.
அரசியல் விமர்சனங்கள்
பாதுகாப்பு செலவினத்தை அதிகரித்தால் உள்ளநாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாயப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆனால், நட்டோ நாடுகள் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு தயாராக இருக்க வேண்டிய அவசியம் இப்போது அதிகரித்துள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த வரலாற்றுச் சம்பவம், ஐரோப்பிய பாதுகாப்பை புதிய பரிணாமத்தில் கொண்டு செல்வதோடு, டிரம்ப் காலத்தின் முக்கிய அரசியல் வெற்றியாகவும் கருதப்படுகிறது.
asianetnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments