
2025 ஜூலை 16ம் திகதி டமாஸ்கஸின் மையப்பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் நடாத்தியது. SANAவின் தகவல்படி, தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் காயமடைந்தனர்.
dட்ரூஸ் மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் இந்தத் தாக்குதலை மேற்கொண்டபோதிலும், இது பிராந்திய பதற்றத்தை அதிகரித்து, சிரியாவின் ஸ்தீரமின்மையை ஆழப்படுத்தியுள்ளது.
dட்ரூஸ் (Druzes) மக்கள் மத்திய கிழக்கில், சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் ஜோர்டானில் வாழும் ஒரு தனித்துவமான மத மற்றும் இனக்குழுவாவர். இவர்கள் இஸ்லாத்தின் ஒரு கிளையான இஸ்மாயிலி ஷியா மரபிலிருந்து உருவானவர்கள் என்றாலும், இவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தனித்தன்மை வாய்ந்தவை.
ட்ரூஸ் மதம் 11ம் நூற்றாண்டில் எகிப்தில் உருவானது, இது கலீஃபா அல்-ஹாகிம் பின் அம்ர் அல்லாஹியின் தெய்வீகத்தன்மையை மையப்படுத்திய ஒரு மதமாகும்.
மறுபிறவி (reincarnation), ஒரே இறை நம்பிக்கை, மற்றும் மத மர்மங்களைப் பாதுகாப்பது போன்ற தனித்துவமான கோட்பாடுகளைக் கொண்ட ட்ரூஸ் மதத்தினர் தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்துவதில்லை; தங்களைத் தனி மதக் குழுவாக அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.
உலகளவில் ட்ரூஸ் மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் உள்ளனர். சிரியாவில் சுவைடா மாகாணத்தில் சுமார் 7 இலட்சம் பேர்களும், லெபனானில் ஷூஃப் மலைப்பகுதி மற்றும் பெய்ரூட்டில் சுமார் 2.5 இலட்சம் மக்களும், இஸ்ரேல் கலிலி மற்றும் கோலான் குன்றுகளில் சுமார் 1.5 இலட்சம் மக்களும்,
ஜோர்டான் மற்றும் பிற நாடுகளில் சிறிய எண்ணிக்கையினரும் வாழ்கின்றனர்.
ட்ரூஸ் மக்கள் அரபு மொழி பேசுபவர்கள்; ஆனால் இவர்களின் கலாசாரம் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மேலும் இவர்களின் மத நூல்கள் மற்றும் சடங்குகளை "உகால்" (ஞானிகள்) எனப்படும் மதத் தலைவர்கள் மட்டுமே அறிவர். ட்ரூஸ் சமூகம் மிகவும் ஒற்றுமையானது, மற்றவர்களுடன் திருமணம் செய்யாமல், தங்கள் சமூகத்திற்குள் மட்டுமே திருமணம் செய்கின்றனர்.
சிரியாவில் ட்ரூஸ் மக்கள் முக்கியமாக தெற்கு மாகாணமான சுவைடா அல்லது "ட்ரூஸ் மலை" என்று அழைக்கப்படும் பகுதியில் வாழ்கின்றனர். இது இஸ்ரேல்-சிரியா எல்லைக்கு அருகில் உள்ளது.
சிரிய உள்நாட்டுப் போரின்போது, ட்ரூஸ் மக்கள் பெரும்பாலும் நடுநிலை வகித்தனர்; ஆனால் அவர்களின் பகுதிகளைப் பாதுகாக்க உள்ளூர் ஆயுதக் குழுக்களை உருவாயினர்.

2024ல் அசாத் ஆட்சி வீழ்ந்த பிறகு, சுவைடாவில் ட்ரூஸ் மக்களுக்கும், சிரிய அரசு ஆதரவு 'பெடுயின்' குழுக்களுக்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்தன. இதனால், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.
இஸ்ரேல், ட்ரூஸ் மக்களை பாதுகாக்கும் நோக்கில், சிரிய அரசு மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றது. அந்த வகையில், 2025 ஜூலை 16 அன்று டமாஸ்கஸில் நடந்த தாக்குதல் ட்ரூஸ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் காட்டிக் கொள்ளும் இஸ்ரேலின் ஒரு பிரயத்தனமாகும்.
இஸ்ரேலிலுள்ள ட்ரூஸ் மக்கள் இஸ்ரேல் அரசுக்கு விசுவாசமாக இருக்கின்றனர்; பலர் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) யில் பணியாற்றுகின்றனர்
சிரியாவிலுள்ள ட்ரூஸ் மக்களை ஆதரிப்பதாகக் கூறி, கோலன் குன்றுகள் மற்றும் சுவைடா பகுதிகளில் இஸ்ரேல்தலையீடு செய்து வருகின்றது.
இதனை சிரியாவின் இறையாண்மை மீதான மீறலாக சர்வதேச அளவில் விமர்சிக்கப்படுகின்றது!
2025 ஜூலை 16 அன்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நுழைவாயில் மற்றும் இராணுவ தலைமையக கட்டிடம் பாதிப்புக்குள்ளானது. விமானப்படை ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால் இஸ்ரேல்-சிரியா எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
துருக்கி இந்தத் தாக்குதல்களை "சிரியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான சதி" எனக் கண்டித்து, உடனடியாக இத்தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
சிரியா மீதான வான்வழித் தாக்குதல்களின் மறைவில், மீண்டும் ஒருமுறை இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு நீதியை எதிர்கொள்வதில் தாமதம் பெற்றுள்ளார்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தமஸ்கஸைத் தாக்கியதால், நெதன்யாகுவின் ஊழல் விசாரணை மிகவும் வசதியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாட்சியமளிப்பதை ஒத்திவைப்பதற்கான காரணம் "தேசிய பாதுகாப்பு கடமைகள்" என்று இஸ்ரேலிய நீதிமன்றம் குறிப்பிடுகின்றது.
இது ஒரு முறை மட்டுமே நிகழும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஒரு பழக்கமான கதையின் ஒரு பகுதியாகும்.
நெதன்யாகு அரசியல் ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ தனது மூலையை முடுக்கி விடுவதால், இராணுவத் தீவிரம் மர்மமாகத் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments