
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை முதல் முறையாக ஆல் அவுட்டாக்கி வெற்றி பெற்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூலை 22ஆம் தேதி தாக்காவில் நடைபெற்றது.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் கடுமையாக போராடி 20 ஓவரில் 133 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜாகிர் அலி 55, மெஹதி ஹசன் 33 ரன்கள் எடுத்தார்கள்.
பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சல்மான் மிர்சா, அப்பாஸ் அப்ரிடி, அகமத் டேனியல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 134 ரன்களை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு ஃபகார் ஜமான் 8, சாய்ம் ஆயுப் 1, முகமது ஹாரிஸ் 0, ஹாசன் நவாஸ் 0, முகமது நவாஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 4.4 ஓவரில் 15/5 என சரிந்த பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது கேப்டன் சல்மான் ஆகா 9, குஷ்தில் ஷா 13 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அதிரடியாக விளையாட முயற்சித்த அப்பாஸ் அப்ரிடி 19 ரன்னில் அவுட்டானார். ஆனால் 8வது இடத்தில் பேட்டிங் செய்த பஹிம் அசரப் அதிரடி விளையாடி அரை சதத்தை அடித்தார்.
அவருடைய அதிரடியால் சரிவிலிருந்து மீண்டெழுந்த பாகிஸ்தான் வெற்றியை நெருங்கியது. அப்போது அஸ்ரப் 51 (32) ரன்னில் 19வது ஓவரில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். கடைசியில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் வீசிய 20வது ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்புறம் போராடிய டேனியல் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 2வது பந்தில் 17 (11) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதனால் 19.2 ஓவரில் பாகிஸ்தானை 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் வாயிலாக 2015க்குப்பின் 10 வருடங்கள் கழித்து வரலாற்றில் 2வது முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டி20 தொடரை வென்று வங்கதேசம் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மெஹதி ஹசன் 2, சோரிபுல் இஸ்லாம் 3, தன்சிம் ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments